VOC Port Trust Recruitment 2021 | New Vacancies | Apply Online

வ.உ.சிதம்பரனார் துறைமுக வேலைவாய்ப்பு 2021 | தூத்துக்குடி துறைமுகம் | முதுநிலை துணை தலைமை மருத்துவ அதிகாரி காலியிடம் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.06.2021

VOC Port Trust Recruitment

VOC Port Trust Recruitment 2021 | Tuticorin Harbour | Senior Deputy Chief Medical Officer Post | 01 Vacancy | Application Form | Last Date: 11.06.2021 | vocport.gov.in

Latest VOC Port Trust Recruitment 2021 Notification – VOCPT என்று அழைக்கப்படும் V.O.CHIDAMBARANAR Port Trust அதாவது வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி முதுநிலை துணை தலைமை மருத்துவ அதிகாரி (Senior Deputy Chief Medical Officer) பதவிக்கு 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.80,000 முதல் ரூ.2,20,000/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் வலைதளம் (vocport.gov.in) சென்று விண்ணப்பத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தூத்துக்குடி துறைமுகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 11.06.2021. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் Absorption through Composite முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தூத்துக்குடி துறைமுக வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 45 ஆண்டுகள்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • சம்மந்தப்பட்ட துறையில் முதுநிலை பட்டம் (PG Degree) அல்லது முதுநிலை பட்டயப் படிப்பு (PG Diploma) முடித்திருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • முதுநிலை பட்டம் (PG Degree) பெற்றவர்கள் 10 ஆண்டுகள் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்பு (PG Diploma) முடித்தவர்கள் 12 ஆண்டுகள் தொடர்புடைய துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • தகுதி (Merit) அடைப்படையில் விண்ணப்பதாரர்கள்  தெரிவு செய்யப்படுவர்.
  • வருடாந்திர ரகசிய அறிக்கைகளில் (Annual Confidential Reports) “Very Good” என்ற தகுதி மூலம் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் வலைதளத்திற்கு (vocport.gov.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • முகவரி: Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin – 628 004, Tamil Nadu.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 11.06.2021.
  • விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின் மீது தவறாது குறிப்பிட வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் (V.O.CHIDAMBARANAR Port Trust)
அறிவிப்பு எண் GAD-OGAG1-EST – MED-F-V1-19/ E-I (16949)/ D.622
பதவிகள் முதுநிலை துணை தலைமை மருத்துவ அதிகாரி (Senior Deputy Chief Medical Officer)
காலியிடம் 01
ஊதியம் ரூ. 80,000 – ரூ. 2,20,000/-
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் (Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 11.06.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு