UPSC ESE 2021 | 215 Engineering Services Vacancies | Apply Online

UPSC ESE 2021 | பொறியியல் பணிகள் தேர்வு | 215 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 27.04.2021

UPSC ESE

UPSC ESE 2021 | Engineering Services Exam | 215 Vacancies | Apply Online | Last Date: 27.04.2021 | upsconline.nic.in

Latest UPSC ESE 2021 Notification – UPSC என்று அழைக்கப்படும் Union Public Service Commisssion அதாவது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2021 ஆம் ஆண்டிற்கான Engineering Services Exam (ESE) அறிவிப்பை (Examination Notice No. 07/2021‐ENGG) 07.04.2021 அன்று வெளியிட்டுள்ளது. இத்தேர்வு இந்திய அளவில் பொறியியல் படித்தவர்களுக்கு நடத்தப்படும் தேர்வாகும். இத்தேர்வின் மூலம் மத்திய அரசு துறைகளில் Civil, Mechanical, Electrical மற்றும் Electronics & Telecommunication Engineering பிரிவுகளில் காலியாகவுள்ள பொறியியல் பணிகளுக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆகும்.

மேலும் முதல்நிலை தேர்வானது (Preliminary Examination/ Stage-I) 18.07.2021 அன்று நடைபெறும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் UPSC வலைதளத்திற்கு (upsconline.nic.in) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.04.2021 (6.00 PM). இட ஒதிக்கீடு பற்றி அறிய UPSC பொறியியல் பணிகள் தேர்வு அறிவிப்பை காணவும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் – 011‐23385271/ 011‐23381125/ 011‐23098543.

UPSC ESE 2021 அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • 21 வயதை அடைந்திருக்க வேண்டும்.
  • 30 வயதை அடைந்திருக்க கூடாது.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.01.2021.
  • வயது தளர்வு விவரங்களை பெற UPSC ESE 2021 அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பொறியியல் (Engineering) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination).
  • முதன்மைத் தேர்வு (Main examination).
  • ஆளுமை சோதனை (Personality Test).

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • தேர்வானது இரண்டு பிரிவுகளாக (Paper – I & Paper – II) நடைபெறும்.
  • முதல்நிலைத் தேர்வு (Preliminary/Stage-I Examination) Objective Test அடிப்படையில் மொத்தமாக 500 மதிப்பெண்களுக்கு 5 மணி நேரம் நடைபெறும்.
  • முதன்மைத் தேர்வு (Main/Stage – II Examination) Conventional Test அடிப்படையில் மொத்தமாக 600 மதிப்பெண்களுக்கு 6 மணி நேரம் நடைபெறும்.
  • அதனை தொடர்ந்து ஆளுமை சோதனை (Personality Test) நடைபெறும்.

தேர்வுக் கட்டணம் (Examination Fee):-

  • தேர்வுக் கட்டணம் – ரூ.200/-
  • SC/ ST/ PWBD/ பெண்கள் பிரிவினர் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • தேர்வுக் கட்டணத்தை இணைய வழியிலும் மற்றும் SBI வங்கி கிளைகளிலும் செலுத்தலாம்.
  • கட்டணம் செலுத்த கடைசி நாள் 27.04.2021 (6.00 PM).
  • SBI வங்கி கிளைகளில் கட்டணம் செலுத்துவதற்கான சீட்டை (Pay-in Slip) பதிவிறக்கம் (Download) செய்ய கடைசி நாள் 26.04.2021.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் UPSC வலைதளத்திற்கு (upsconline.nic.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) முழுமையாக நிரப்பி 07/04/2021 முதல் 27/04/2021 (6.00 PM) வரை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission)
அறிவிப்பு எண் No. 07/2021 ‐ ENGG
காலியிடங்கள் 215
தேர்வு Engineering Services Examination – ESE
தேர்வு நாள் Preliminary Examination (Stage–I) – 18.07.2021
கட்டணம் செலுத்தும் முறை இணைய வழி (Online)/ Pay by Cash
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 27.04.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு