TNSCW Recruitment 2020 | Chairperson and Members Vacancies | Application Form

TNSCW வேலைவாய்ப்பு 2020 | தலைவர் & உறுப்பினர்கள் | 04 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.12.2020

TNSCW Recruitment

TNSCW Recruitment 2020 | Social Welfare and Nutritious Meal Programme Department | Chairperson & Members Posts | 04 Vacancies | Application Form | Last Date: 18.12.2020 | tn.gov.in

Latest TNSCW Recruitment 2020 Notification – Tamil Nadu State Commission for Women (TNSCW) அதாவது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 02.12.2020 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்கு தலைவர் பதவிக்கும் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆகும். அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தினை (Application Form) தமிழ்நாடு அரசு வலைதளத்திலிருந்து (tn.gov.in) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18.12.2020 (5.30 PM). காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

TNSCW வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே நியமனம் அமையும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் தமிழ்நாடு அரசு வலைதளம் (tn.gov.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய ஆதார ஆவணங்களை இணைத்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் கிடைக்கப்பெறுமாறு பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • முகவரி: உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், கலச மஹால், சேப்பாக்கம், சென்னை – 5.
  • விண்ணப்பங்களை 18/12/2020 தேதி மாலை 5:30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
நிறுவனம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் (Tamil Nadu State Commission for Women)
பதவிகள் தலைவர் & உறுப்பினர்கள்
காலியிடங்கள் 04
பணியிடம் சென்னை
விண்ணப்பிக்க கடைசி நாள் 18.12.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு