TNSCST வேலைவாய்ப்பு 2021 | தட்டெழுத்தாளர், அலுவலக உதவியாளர் மற்றும் பல பதவிகள் | 14 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.01.2021
TNSCST Recruitment 2021 | Typist, Office Assistant, Driver and Various Posts | 14 Vacancies | Application Form | Last Date: 07.01.2021 | tanscst.nic.in
Latest TNSCST Recruitment 2021 Notification – Tamilnadu State Council for Science and Technology (TNSCST) அதாவது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பின் அறிவிப்பின் படி அறிவியல் அதிகாரி (Scientific Officer), கணினி ஆய்வாளர் (Systems Analyst), தட்டெழுத்தாளர் (Typist), இளநிலை உதவியாளர் (Junior Assistant), ஓட்டுனர் (Driver), அலுவலக உதவியாளர் -கூட- ஓட்டுனர் (Office Assistant -cum- Driver) மற்றும் அலுவலக உதவியாளர் (Office Assistant) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 14 ஆகும். இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும், தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அவரவர் பதவிக்கேற்ப ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.1,82,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் TANSCST வலைதளத்திற்கு (tanscst.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 07.01.2021. ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
TNSCST வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்
பதவிகள் (Posts) | காலியிடங்கள் (Vacancies) |
Scientific Officer | 06 |
Systems Analyst | 01 |
Typist | 01 |
Junior Assistant | 02 |
Driver | 01 |
Office Assistant-cum-Driver | 01 |
Office Assistant | 02 |
மொத்தம் (Total) | 14 |
TNSCST வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகபட்ச வயது 24/ 30 ஆண்டுகள்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் எட்டாம் வகுப்பு/ தட்டச்சு (Typing)/ இளநிலை பட்டம்/ முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Scientific Officer மற்றும் Systems Analyst பதவிகளுக்கு முதல் வகுப்பில் (First Class) தேர்ச்சி பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- மேலும் கல்வித் தகுதிகளை தெரிந்துகொள்ள TNSCST விளம்பரத்தை காணவும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- அறிவியல் அதிகாரி (Scientific Officer) மற்றும் கணினி ஆய்வாளர் (Systems Analyst) பதவிகளுக்கு விண்ணப்பிப்பவருக்கு ஒரு வருடம் ஆராய்ச்சி அல்லது கற்பித்தலில் அனுபவம் (research or teaching experience) இருக்க வேண்டும்.
- ஓட்டுநர் (Driver) பதவிக்கு விண்ணப்பிப்பவர் மூன்று வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிற தகுதிகள் (Other Qualification):-
- அலுவலக உதவியாளர் (Office Assistant) பதவிக்கு விண்ணப்பிப்பவருக்கு மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
- ஓட்டுநர் (Driver) பதவிக்கு விண்ணப்பிப்பவர் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் TNSCST அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- நேர்காணல் (Interview).
விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-
- விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- வரைவோலை [Demand Draft (DD)] மூலம் செலுத்தலாம்.
- SC/ ST பிரிவினர் ரூ.250/- மட்டும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் TANSCST வலைதளத்திற்கு (tanscst.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தினை (Application form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
- முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் விவரங்களை உள்ளடக்கிய கல்வித்தகுதி, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்ற முன்னுரிமை சான்றிதழ்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- அஞ்சல் முகவரி: Member Secretary, Tamilnadu State Council for Science and Technology, DOTE Campus, Chennai 600 025.
- விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 07/01/2021.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNSCST அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் (TAMILNADU STATE COUNCIL FOR SCIENCE AND TECHNOLOGY |
பதவிகள் | Scientific Officer, Systems Analyst, Typist, Junior Assistant, Driver, Office Assistant-cum-Driver & Office Assistant |
காலியிடங்கள் | 14 |
பணியிடம் | சென்னை |
ஊதியம் | ரூ.15,700 – ரூ.1,82,400 |
கட்டணம் செலுத்தும் முறை | வரைவோலை [Demand Draft (DD)] |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 07.01.2021 |
முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification 1)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
இரண்டாவது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification 2)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.