TNSCPS Recruitment 2021 | Latest Vacancy | Application Form

TNSCPS வேலைவாய்ப்பு 2021 | திட்ட அலுவலர் பதவி | 02 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.01.2021

TNSCPS Recruitment 2020

TNSCPS Recruitment 2021 | Programme Officer | 02 Vacancies | Application Form | Last Date: 08.01.2021 | tn.gov.in

Latest TNSCPS Recruitment 2021 NotificationTNSCPS என்று அழைக்கப்படும் Tamil Nadu State Child Protection Society அதாவது தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி திட்ட அலுவலர் (Programme Officer) பதவிக்கு 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ வலைதளம் (tn.gov.in) சென்று விண்ணப்பத்தை (Application Form) இணைய வழியில் (Online) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08.01.2021.

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த (Contract) அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். இந்த பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.26,250/- வழங்கப்படும். சமூகப்பணி (Social Work)/ கல்வியியல் (Education)/ உளவியல் (Psychology)/ சமூகவியல் (Sociology)/ குற்றவியல் (Criminology)/ குழந்தை வளர்ச்சி (Child Development) இவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தால் நிராகரிக்கப்படும்.

TNSCPS வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகப் பட்ச வயது 40 ஆண்டுகள்.

கல்வித் தகுதி (Educational Qualification):-

  • பட்டதாரி (Graduate) அல்லது முதுநிலை பட்டதாரி (Post Graduate) விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • குழந்தை நலம் (Child Welfare)/ சமூக நலம் (Social Welfare)/ கல்வி (Education)/ தொழிலாளர் நலன் (Labour) ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் 3 வருடம் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ வலைதளம் (tn.gov.in) சென்று விண்ணப்பத்தை (Application Form) பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.
  • விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி, செயலாளர்,மாநில குழந்தை பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்புத் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை – 10.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08.01.2021.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (TNSCPS) வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (Tamil Nadu State Child Protection Society)
பதவி திட்ட அலுவலர் (Programme Officer)
காலியிடங்கள் 02
பணியிடம் சென்னை
தொகுப்பூதியம் ரூ.26,250/-
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
விண்ணப்பிக்க கடைசி நாள் 08.01.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு