TNSCB Recruitment 2021 | New Vacancy | Application Form

TNSCB வேலைவாய்ப்பு 2021 | புதிய காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.12.2021

TNSCB Recruitment

TNSCB Recruitment 2021 | IEC Specialist Post (TNUHDB) | PMAY | 01 Vacancy | Application Form | Last Date: 10.12.2021 | tnscb.org

Latest TNSCB Recruitment 2021 Notification – Tamil Nadu Slum Clearance Board (TNSCB) அதாவது தமிழ்நாடு குடிசைப்பகுதி ஒழிப்பு வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு (01 /2021) ஒன்றை 18/11/2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் [Tamil Nadu Urban Habitat Development Board – (TNUHDB)] பணிபுரிய Information, Education and Communication (IEC) Specialist பதவிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கு ஆறு மாத தற்காலிக அடிப்படையில் (Contract basis) காலியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக (Consolidated pay) மாதம் ரூ. 85,000/- வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் (tnscb.org) சென்று விண்ணப்பத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.12.2021. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

TNSCB வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 45 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நாள் 15/11/2021.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் முதுகலைப் பட்டம் (Visual communication/ Mass Communication/ Public relations/ Journalism/ Social Work/ Development) பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • சம்பந்தப்பட்ட துறைகளில் 07 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக படிக்க, பேச மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் (tnscb.org) சென்று விண்ணப்பத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பிறப்புச் சான்றிதழ், கல்வித்தகுதி, அனுபவச் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து பதிவஞ்சல் (Registered post)/ விரைவஞ்சல் (Speed post) மூலமாக பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • முகவரி: The Superintending Engineer, Project Monitoring Unit, Tamil Nadu Urban Habitat Development Board, No.5, Kamarajar Salai, Chennai-05.
  • விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின் மீது தவறாது குறிப்பிட வேண்டும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.12.2021 (5.00 PM).

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNSCB அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாடு குடிசைப்பகுதி ஒழிப்பு வாரியம் – Tamil Nadu Slum Clearance Board (TNSCB)
அறிவிப்பு எண் 01 /2021
பதவி Information, Education and Communication (IEC) Specialist
காலியிடம் 01
பணியிடம் சென்னை
ஊதியம் ரூ. 85,000/-
விண்ணப்பிக்கும் முறை பதிவஞ்சல் (Registered post)/ விரைவஞ்சல் (Speed post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 10.12.2021
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form)/ அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு