TNRTP வேலைவாய்ப்பு 2021 | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை | EDO/ EFO பதவிகள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.11.2021
TNRTP Recruitment 2021 | Department of Rural Development and Panchayat Raj | EDO / EFO Posts | Application Form | Last Date: 15.11.2021 | tnrtp.org
Latest TNRTP Recruitment 2021 Notification – TNRTP என்று அழைக்கப்படும் Tamil Nadu Rural Transformation Project அதாவது தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்புகளை 22.10.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி நிறுவன மேம்பாட்டு அதிகாரி (Enterprise Development Officer) மற்றும் நிறுவன நிதி அதிகாரி (Enterprise Finance Officer) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பதவிகளுக்கு ஒப்பந்த பணிநியமன அடிப்படையில் (Contract basis) காலியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும், தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஊதியமாக ரூ.25,000/- மற்றும் இதர படிகளும், சலுகைகளும் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் TNRTP வலைதளம் (tnrtp.org) சென்று விண்ணப்பத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.11.2021.
TNRTP வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகபட்ச வயது 40 ஆண்டுகள்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- கணினி திறனோடு (Computer Proficiency) ஏதேனும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- ஒருங்கிணைப்பு மற்றும் நெட்வொர்க்கிங்கில் (Coordination & Networking) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிற தகுதிகள் (Other Qualification):-
- கிராமப்புற நிறுவனங்கள் (Rural Enterprises) மற்றும் வணிக வளர்ச்சி (Business Development) பற்றிய நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் TNRTP வலைதளம் (tnrtp.org) சென்று விண்ணப்பத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்மந்தப்பட்ட TNRTP மாவட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் (Post) மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
- TNRTP மாவட்ட அலுவலக முகவரிகள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.11.2021.
விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNRTP அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டம் – Tamil Nadu Rural Transformation Project (TNRTP) |
பதவிகள் | Enterprise Development Officer & Enterprise Finance Officer |
ஊதியம் | ரூ.25,000/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 15.11.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.