TNRD Trichy Recruitment 2021 | Overseer/ JDO Vacancies | Application Form

TNRD திருச்சி வேலைவாய்ப்பு 2021 | பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் | 22 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.01.2021

TNRD Trichy Recruitment

TNRD Trichy Recruitment 2021 | Overseer/ Junior Drafting Officer Post | 22 Vacancies | Application Form | Last Date: 08.01.2021 | tiruchirappalli.nic.in

Latest TNRD Trichy Recruitment 2021 Notification – திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு வலைதளத்தில் 07.12.2020 தேதி அன்று வேலைவாய்ப்பு அறிவிப்பு (ந.க. எண்.6472/2020/தா7) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் (Rural Development & Panchayat Unit, Tiruchirappalli) பணிப்பார்வையாளர் (Overseer)/ இளநிலை வரைதொழில் அலுவலர் (Junior Drafting Officer) பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆகும். இந்த பணிகளுக்கு நேரடி நியமனம் (Direct Appointment) மூலம் காலியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவத்தினை (Application Form) திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு வலைதளத்திலிருந்து (tiruchirappalli.nic.in) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08.01.2021 (5.45 PM). காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேற்கூறப்பட்ட பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும். இடஒதிக்கீடு காலியிடங்கள் பற்றி அறிய திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை காணவும்.

TNRD திருச்சி வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகப்பட்ச வயது 35 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/07/2020.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பட்டயப்படிப்பில் (Diploma) குடிமுறைப் பொறியியலில் (Civil Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தொலைதூர கல்வி முறை (Distance Mode) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • எழுத்துத் தேர்வு (Written test).

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு வலைதளம் (tiruchirappalli.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, சாதிச்சான்று மற்றும் முன்னுரிமை சான்றுகளின் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளரிடம் (வளர்ச்சிப் பிரிவு) நேரிலோ அல்லது பின்வரும் முகவரிக்கு பதிவஞ்சல் (Registered Post) மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
  • அஞ்சல் முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி – 620 001.
  • விண்ணப்பங்களை 08/01/2021 தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNRD திருச்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Tamil Nadu Rural Development & Panchayat Raj)
அறிவிப்பு எண் ந.க.எண். 6472/2020/தா7
பதவிகள் பணிப் பார்வையாளர் (Overseer)/ இளநிலை வரைதொழில் அலுவலர் (Junior Drafting Officer)
காலியிடங்கள் 22
பணியிடம் திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli)
ஊதியம் ரூ.35,400 – ரூ.1,12,400/-
விண்ணப்ப முறை நேரில்/ பதிவஞ்சல் (Registered Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 08/01/2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு