TNRD Thiruvarur Recruitment 2021 | OA Vacancies | Application Form

TNRD திருவாரூர் வேலைவாய்ப்பு 2021 | அலுவலக உதவியாளர் பதவி | 11 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.02.2021

TNRD Thiruvarur Recruitment

TNRD Thiruvarur Recruitment 2021 | Office Assistant Post | 11 Vacancies | Application Form | Last Date: 25.02.2021 | tiruvarur.nic.in

Latest TNRD Thiruvarur Recruitment 2021 Notification – திருவாரூர் மாவட்டம் (Thiruvarur District),  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Rural Development and Panchayat Raj Department) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 09.02.2021 தேதி அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி அலுவலக உதவியாளர் (Office Assistant) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 11. இந்த பதவிகளை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையிலும் மற்றும் படிகளும் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் திருவாரூர் மாவட்ட அரசு வலைத்தளம் (tiruvarur.nic.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 25.02.2021. இட  ஒதுக்கீடு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

TNRD திருவாரூர் வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/01/2021.
  • வயது தளர்வு விவரங்களை பெற திருவாரூர் ஊராட்சித் துறை விளம்பரத்தை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview).

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் திருவாரூர் மாவட்ட அரசு வலைத்தளம் (tiruvarur.nic.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
  • முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
  • அனுப்ப வேண்டிய முகவரி, அறை எண். 60, மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், திருவாரூர்.
  • விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 25.02.2021 (5:45 PM).

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் திருவாரூர் ஊராட்சித் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, திருவாரூர் மாவட்டம்
பதவிகள் அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடம்/ காலியிடங்கள் 11
பணியிடம் திருவாரூர்
ஊதியம் ரூ.15,700 – ரூ. 50,000/-
விண்ணப்பிக்கும் முறை நேரில்/ பதிவஞ்சல் (Registered Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 25.02.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு