TNRD Kanniyakumari Recruitment 2020 | OA, Night Watchman and Jeep Driver Vacancies | Application Form

TNRD கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2020 | இரவுக் காவலர், அலுவலக உதவியாளர் & ஈப்பு ஓட்டுநர் பதவிகள் | 11 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.12.2020

TNRD Kanniyakumari Recruitment

TNRD Kanniyakumari Recruitment 2020 | Office Assistant, Night Watchman and Jeep Driver Posts | 11 Vacancies | Application Form | Last Date: 30.12.2020 | kanniyakumari.nic.in

Latest TNRD Kanniyakumari Recruitment 2020 Notification – கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் (Rural Development & Panchayat Unit, Kanniyakumari) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு (ந.க.எண்: ஈ7/34675/2019) 07.12.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிப்பானது கன்னியாகுமரி மாவட்ட அரசு வலைதளத்தில் (kanniyakumari.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி இரவுக் காவலர் (Night Watchman), அலுவலக உதவியாளர் (Office Assistant) மற்றும் ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆகும். இந்த கன்னியாகுமரி மாவட்ட அரசு பணிகளுக்கு நேரடி நியமனம் (Direct Recruitment) மூலம் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை (Application Form) கன்னியாகுமரி மாவட்ட அரசு வலைதளத்தில் (kanniyakumari.nic.in) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ அல்லது பதிவுத் தபால் (Registered Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.12.2020. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை ஊதியம் மற்றும் இதர படிகளும் வழங்கப்படும். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

TNRD கன்னியாகுமரி வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
இரவுக் காவலர் (Night Watchman) 03
அலுவலக உதவியாளர் (Office Assistant) 04
ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) 04
மொத்தம் (Total) 11

TNRD கன்னியாகுமரி வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/07/2020.
  • வயது தளர்வு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இரவுக் காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஐந்தாண்டு ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் TNRD கன்னியாகுமரி அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த இரவுக் காவலர் (Night Watchman), அலுவலக உதவியாளர் (Office Assistant) மற்றும் ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்வும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் கன்னியாகுமரி மாவட்ட அரசு வலைதளம் (kanniyakumari.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும் அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று மற்றும் முன்னுரிமை சான்றுகளின் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்க்கு (வளர்ச்சி) நேரிலோ அல்லது பின்வரும் முகவரிக்கு பதிவஞ்சல் (Registered Post) மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
  • அஞ்சல் முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி), கன்னியாகுமரி மாவட்டம் – 629001.
  • விண்ணப்பங்களை 30/12/2020 தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Tamil Nadu Rural Development & Panchayat Raj)
அறிவிப்பு எண் ந.க.எண்: ஈ7/34675/2019
பதவிகள் இரவுக் காவலர் (Night Watchman),

அலுவலக உதவியாளர் (Office Assistant) & ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver).

காலியிடங்கள் 11
பணியிடம் கன்னியாகுமரி
ஊதியம் ரூ.15,700 – ரூ.62,000/-
விண்ணப்பிக்கும் முறை நேரில் / பதிவஞ்சல் (Registered Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.12.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு