TNRD Coimbatore Recruitment 2021 | 08 Village Panchayat Secretary Vacancies | Application Form

TNRD கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 | கிராம ஊராட்சி செயலர் பதவி | 08 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 17.02.2021

TNRD Coimbatore Recruitment

TNRD Coimbatore Recruitment 2021 | Village Panchayat Secretary Post | 08 Vacancies | Application Form | Last Date: 17.02.2021 | coimbatore.nic.in

Latest TNRD Coimbatore Recruitment 2021 Notification – தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Tamilnadu Rural Development and Panchayat Raj) வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கோயம்புத்தூர் மாவட்ட அரசு வலைதளத்தில் 10.02.2021 தேதி அன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 08 கிராம ஊராட்சிகளில் கிராம ஊராட்சி செயலர் (Village Panchayat Secretary) பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 08 ஆகும். இந்த பணிக்கு குறைந்தபட்சமாக ரூ.15,900 ஊதியமாகவும் மற்றும் இதர படிகளும் வழங்கப்படும்.

இந்த பணிக்கு நேரடி நியமனம் (Direct Recruitment) மூலம் காலியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கோவை மாவட்ட அரசு வலைதளத்திலிருந்து (coimbatore.nic.in) விண்ணப்பப் படிவத்தினை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17.02.2021 (5:45 PM). பின்வரும் ஊராட்சிகளில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, வாரப்பட்டி, தாத்தூர், பெரியபோது, இரமணமுதலிபுதூர், இலுப்பநத்தம், மாவுத்தம்பதி, வடக்கலூர் மற்றும் வடசித்தூர்.

TNRD கோவை வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

கிராம ஊராட்சிகள் (Village Panchayat) காலியிடங்கள் (Vacancies)
வாரப்பட்டி 01
தாத்தூர் 01
பெரியபோது 01
இரமணமுதலிபுதூர் 01
இலுப்பநத்தம் 01
மாவுத்தம்பதி 01
வடக்கலூர் 01
வடசித்தூர் 01
மொத்தம் 08

TNRD கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகப்பட்ச வயது 30 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/07/2020.
  • வயது தளர்வு விவரங்களை பெற கோயம்புத்தூர் மாவட்ட அரசு அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ள ஊராட்சிப் பகுதிக்குள் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview).

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் கோவை மாவட்ட அரசு வலைதளம் (coimbatore.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, சாதிச்சான்று, இருப்பிடம் மற்றும் முன்னுரிமை சான்றுகளின் நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் (Registered Post) மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
  • விண்ணப்பங்களை 17/02/2021 தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNRD கோயம்புத்தூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக  விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Tamilnadu Rural Development and Panchayat Raj)
பதவிகள் கிராம ஊராட்சி செயலர் (Village Panchayat Secretary)
காலியிடங்கள் 08
பணியிடங்கள் கோவை மாவட்டத்தில் உள்ள 08 கிராம ஊராட்சிகள்
ஊதியம் ரூ. 15,900/-
விண்ணப்பிக்கும் முறை நேரில்/ பதிவஞ்சல் (Registered Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 17.02.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு