TNPSC Recruitment 2021 | 199 Vacancies | Apply Online

TNPSC வேலைவாய்ப்பு 2021 | 199 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 19.11.2021

TNPSC Recruitment

TNPSC Recruitment 2021 | RA, SA & other Posts | 199 Vacancies | Apply Online | Last Date: 19.11.2021 | tnpsc.gov.in

Latest TNPSC Recruitment 2021 Notification – Tamil Nadu Public Service Commission (TNPSC) அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை (596 / 597) 20.10.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி Computor–cum- vaccine store keeper, Block Health Statistician, Statistical Assistant மற்றும் Research Assistant பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 199. இந்த பதவிகளுக்கு நேரடி நியமனம் (Direct Recruitment) மூலம் காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அவர்களது பதவிகளுக்கேற்ப மாத ஊதியமாக ரூ. 19,500/- முதல் ரூ. 1,16,600/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் TNPSC வலைதளத்திற்கு (tnpsc.gov.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 19.11.2021 ஆகும். இந்த பதவிகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வானது 09.01.2022/ 22.01.2022 தேதிகளில் நடைபெறும். இட ஒதுக்கீடு பற்றி அறிய அறிவிப்பை காணவும்.

TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Computor–cum-vaccine store keeper 30
Block Health Statistician 161
Statistical Assistant 02
Research Assistant 06
மொத்தம் (Total) 199

TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • SCs, SC(A)s, STs, MBC(V)s, MBC & DNCs, MBCs, BCs, BCMs மற்றும் DWs – வயது வரம்பு இல்லை.
  • வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/07/2021.
  • வயது தளர்வு விவரங்களைப் பெற அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • அறிவிப்பில் குறிப்பிட்ட பிரிவுகளில் இளநிலை/ முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • தமிழ் மொழியில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் TNPSC அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • எழுத்துத் தேர்வு (Written test)
  • Research Assistant – எழுத்துத் தேர்வு (Written test) & நேர்காணல் (Interview)

ஊதிய விவரங்கள் (Remuneration details):-

  • Computor–cum- vaccine store keeper – ரூ. 19,500 – ரூ. 62,000/-
  • Block Health Statistician – ரூ. 20,600 – ரூ. 65,500/-
  • Statistical Assistant – ரூ. 35,900 – ரூ. 1,13,500/-
  • Research Assistant – ரூ. 36,900 – ரூ. 1,16,600/-

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • எழுத்துத் தேர்வு இரண்டு பிரிவுகளாக (Paper – I & Paper – II) நடைபெறும்.
  • எழுத்துத் தேர்வு Objective Test (OMR) அடிப்படையில் மொத்தமாக 500 மதிப்பெண்களுக்கு 5 மணி நேரங்கள் நடைபெறும்.

பதிவுக் கட்டணம் (Registration Fee):-

  • பதிவுக் கட்டணமாக (One Time Registration) ரூ. 150/- இணைய வழி (Online) மூலம் செலுத்த வேண்டும். முன்னரே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் (Examination Fee):-

  • தேர்வுக் கட்டணம் – ரூ. 100/- இணைய வழி (Online) மூலம் செலுத்தலாம்.
  • Research Assistant – ரூ. 150/-
  • SC, SC (A), ST, PwBD, DW பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online application) சமர்ப்பிக்கும் போது தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் TNPSC வலைதளத்திற்கு (tnpsc.gov.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் பதிவு விவரங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 19.11.2021 ஆகும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – Tamil Nadu Public Service Commission (TNPSC)
அறிவிப்பு எண் 596 & 597
பதவிகள் Computor–cum vaccine store keeper, Block Health Statistician, Statistical Assistant & Research Assistant
காலியிடங்கள் 199
ஊதியம் ரூ. 19,500 – ரூ. 1,16,600/-
எழுத்துத் தேர்வு நாள்கள் 09.01.2022/ 22.01.2022
கட்டணம் செலுத்தும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 19.11.2021
விண்ணப்பிக்க (Online Application) / அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு