TNPSC Group 1 தேர்வு 2020 | Deputy Collector, DSP மற்றும் பல்வேறு பதவிகள் | 69 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 19.02.2020
TNPSC Group I Exam 2020 | Deputy Collector, DSP & Various posts | 69 Vacancies | Apply Online | Last Date: 19.02.2020 | tnpsc.gov.in
Latest TNPSC Group I Exam 2020 Notification – TNPSC என்று அழைக்கப்படும் Tamil Nadu Public Service Commission அதாவது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பு எண் 556, வெளியிடப்பட்டுள்ள தேதி 20.01.2020. இத் தேர்வு அறிவிப்பின்படி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பதவிகள் Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner, Deputy Registrar of Co-operative Societies, Assistant Director of Rural Development மற்றும் District Officer (Fire and Rescue Services).
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 69 ஆகும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். TNPSC வலைதள முகவரியான tnpsc.gov.in சென்று இணைய வழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 19.02.2020 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி மூலம் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி 21.02.2020. அறிவிப்பின்படி முதல் நிலை தேர்வு நடைபெறும் நாள் 05.04.2020. தேர்தெடுக்கப்படும் நபர்களுக்கு குறைந்த பட்ச சம்பளமாக ரூ56,100 வழங்கப்படும் மற்றும் நேரடி பணிநியமன அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
TNPSC Group I தேர்வு அறிவிப்பின் காலிப்பணியிடங்களின் விவரம்
பதவிகள் | காலியிடங்கள் |
Deputy Collector | 18 |
Deputy Superintendent of Police | 19 |
Assistant Commissioner | 10 |
Deputy Registrar of Co-operative Societies | 14 |
Assistant Director of Rural Development | 7 |
District Officer (Fire and Rescue Services) | 1 |
மொத்தம் | 69 |
மேலே கொடுக்கப்பட்டுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் பதவிகள் TNPSC Group 1 Services தேர்வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப் பணியிடங்களின் சரியான மற்றும் முழு விவரங்களை தெரிந்துகொள்ள குரூப் 1 தேர்வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
TNPSC Group I தேர்வு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு:-
- குறைந்தபட்ச வயது – 21 ஆண்டுகள்.
- அதிகபட்ச வயது – 32 ஆண்டுகள் (SC/ST நபர்களுக்கு – 37 ஆண்டுகள்)..
- வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.07.2020.
- வயது தளர்வு விவரங்களை பெற TNPSC குரூப் 1 தேர்வு விளம்பரத்தை காணவும்.
கல்வித் தகுதி:-
- பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதிகளை தெரிந்துகொள்ள TNPSC குரூப் 1 தேர்வு விளம்பரத்தை காணவும்.
பிற தகுதிகள்:-
- Deputy Superintendent of Police பதவிக்கு ஆண்களுக்கு 165 cm உயரம் இருக்க வேண்டும். மார்பு சுற்றளவு 85 cm இருக்க வேண்டும். பெண்களுக்கு 155 cm உயரம் இருக்க வேண்டும்.
- District Officer (Fire and Rescue Services) பதவிக்கு ஆண்களுக்கு 165 cm உயரம் இருக்க வேண்டும். மார்பு சுற்றளவு 89 cm இருக்க வேண்டும் மற்றும் 50 கிலோ எடை இருக்க வேண்டும். பெண்களுக்கு 155 cm உயரம் இருக்க வேண்டும், 50 கிலோ எடை இருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் TNPSC அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த TNPSC Group I தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து விண்ணப்பிக்வும்.
தெரிவு செய்யும் முறை:-
- Preliminary Examination.
- Main Written Examination.
- Oral Test (Interview).
தேர்வு விவரம்:-
- தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.
- முதற்கட்ட தேர்வு 300 மதிப்பெண்ணுக்கு நடைபெறும்.
- இரண்டாம் கட்ட தேர்வு முதல் தாள், இரண்டம் தாள் மற்றும் மூன்றாம் தாள் என்று ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிப்பெண்ணாக மொத்தம் 750 மதிப்பெண்ணுக்கு நடைபெறும்.
- நேர்காணலுக்கு (Interview) மொத்தம் 100 மதிப்பெண்கள்.
பதிவுக் கட்டணம் & தேர்வுக் கட்டணம்:-
- பதிவுக் கட்டணம் (One Time Registration) ரூ150/-
- முதற்கட்ட தேர்வு கட்டணம் ரூ100/-
- இரண்டாம் கட்ட தேர்வு கட்டணம் ரூ200/-
- SC/ST மற்றும் விதவைகளுக்கு கட்டணம் கிடையாது.
- மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள TNPSC Group 1 2020 அறிவிப்பை காணவும்.
விண்ணப்பிக்கும் முறை:-
- விண்ணப்பிக்க விரும்புவோர் TNPSC (tnpsc.gov.in) வலைத்தளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
- முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 19.02.2020.
இந்த TNPSC Group I தேர்விற்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | Tamil Nadu Public Service Commission (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) |
அறிவிப்பு எண் | 556 |
பதவிகள் | Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner, Deputy Registrar of Co-operative Societies, Assistant Director of Rural Development & District Officer (Fire and Rescue Services) |
மொத்த காலியிடம் | 69 |
தேர்வு | Preliminary Examination (முதற்கட்ட தேர்வு), Main Written Examination (இரண்டம் கட்ட) and Interview. |
பணியிடம் | தமிழ்நாடு (Tamil Nadu) |
சம்பளம் | குறைந்த பட்ச சம்பளம் ரூ56,100 |
கட்டணம் செலுத்தும் முறை | Online/ Offline |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கடைசி நாள் | 19.02.2020 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு | இங்கு கிளிக் செய்யவும்>>> |
விண்ணப்பிக்க | இங்கு கிளிக் செய்யவும்>>> |
முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை பெற வேலை முரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள ஏழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.