TNPL வேலைவாய்ப்பு 2020 | மேலாளர், பொறியாளர் மற்றும் சில பதவிகள் | 117 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.12.2020
TNPL Recruitment 2020 | Semi-Skilled, Plant Engineer & other posts | 117 Vacancies | Apply Online | Last Date: 18.12.2020 | tnpl.com
Latest TNPL Recruitment 2020 Notification – TNPL என்று அழைக்கப்படும் Tamil Nadu Newsprint and papers Limited அதாவது தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள தேதி 03.12.2020. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Shift Engineer, Assistant Manager, Plant Engineer மற்றும் Semi Skilled பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 117 ஆகும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் TNPL வலைத்தளம் (tnpl.com) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18.12.2020.
இணைய வழியில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து TNPL நிறுவனத்துக்கு 24.12.2020 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் திருச்சி மாவட்ட மணப்பாறை தாலுக்காவில் அமைந்துள்ள TNPL நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். அவ்வாறு பனி அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.10880 முதல் அதிகப்பட்சமாக ரூ.29300 வரை வழங்கப்படும்
TNPL வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
பதவிகள் (Positions) | காலியிடங்கள் (Vacancies) |
Shift Engineer (Chemical)/ Assistant Manager (Chemical) | 14 |
Plant Engineer (Mechanical)/ Assistant Manager (Mechanical) | 10 |
Plant Engineer (Electrical)/ Assistant Manager (Electrical) | 06 |
Plant Engineer (Instrumentation)/ Assistant Manager (Instrumentation) | 03 |
Semi Skilled (C) (Chemical)/ Semi Skilled (B) (Chemical) | 41 |
Semi Skilled (D) (Mechanical)/ Semi Skilled (C) (Mechanical) | 21 |
Semi Skilled (D) (Electrician)/ Semi Skilled (C) (Electrician) | 12 |
Semi Skilled (C) (Instrumentation)/ Semi Skilled (B) (Instrumentation) (OR) Semi Skilled (D) (Instrument Mechanic)/ Semi Skilled (C) (Instrument Mechanic) | 10 |
மொத்தம் (Total) | 117 |
TNPL வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- Shift Engineer & Plant Engineer – குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 40 ஆண்டுகள்.
- Assistant Manager – குறைந்தபட்சம் 29 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 40 ஆண்டுகள்.
- பிற பதவிகளுக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள்.
- வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/12/2020.
- வயது தளர்வு விவரங்களை பெற TNPL விளம்பரத்தை காணவும.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- பத்தாம் வகுப்புடன் தொழிற் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்/ பட்டாய படிப்பு/ பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- முக்கியமாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவிகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
- மேலும் கல்வி தகுதிகளை தெரிந்து கொள்ள TNPL விளம்பரத்தை காணவும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் TNPL அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து விண்ணப்பிக்வும்.
தெரிவு செய்யும் முறை (Selection Procedure):-
- விண்ணப்பங்களை சரிபார்த்த பிறகு தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் TNPL வலைத்தளம் (tnpl.com) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18.12.2020.
- இணைய வழியில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை அச்சிட்டு நகல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அச்சிட்ட விண்ணப்பத்துடன் (Hard Copy of Application)அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேவையான சான்றிதழ்களை இணைத்து TNPL நிறுவனத்துக்கு 24.12.2020 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
- அனுப்ப வேண்டிய முகவரி, CHIEF GENERAL MANAGER-HR,TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED, KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMILNADU.
- விண்ணப்பத்தை அஞ்சல் (Post) அல்லது கூரியர் (Courier) மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNPL அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (Tamil Nadu Newsprint and Papers Limited) |
அறிவிப்பு எண் | DIPR/1171/Display/2020 |
அறிவிப்பு தேதி | 03.12.2020 |
பதவிகள் | Shift Engineer, Assistant Manager, Plant Engineer & Semi Skilled |
காலியிடங்கள் | 117 |
பணியிடம் | திருச்சி மாவட்ட மணப்பாறை தாலுக்கா |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் (Post)/ கூரியர் (Courier) |
கடைசி நாள் | 18.12.2020 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு/ விண்ணப்பிக்க | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற தமிழக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை பெற வேலை முரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள ஏழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.