TNPCB Recruitment 2020 | 242 New Vacancies | Apply Online

TNPCB வேலைவாய்ப்பு 2020 | A.E, Assistant & Typist பதவிகள் | 242 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.03.2020

TNPCB Recruitment 2020

TNPCB Recruitment 2020 | A.E, Assistant & Typist Posts | 242 Vacancies | Apply Online | Last Date: 26.03.2020 | tnpcb.gov.in

Latest TNPCB Recruitment 2020 Notification – TNPCB என்று அழைக்கப்படும் Tamil Nadu Pollution Control Board அதாவது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (NOTIFICATION.No.02/2019) ஒன்றை 05.03.2020 தேதி அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Assistant Engineer, Environmental Scientist, Assistant (Junior Assistant) மற்றும் Typist பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய பதவிகளுக்கு மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 242. விண்ணப்பிக்க விரும்புவோர் TNPCB அதிகாரப்பூர்வ வலைதளம் (www.tnpcb.gov.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி (Online) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26.03.2020. கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி 26.03.2020. இந்த TNPCB வேலைவாய்ப்பிற்கு தகுந்த நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு இணைய வழித் தேர்வு (Online Examination) நடத்தப்படவுள்ளது. தேர்வு நாள் மற்றும் நேரம் போன்ற தகவல்கள் TNPCB வலைதளத்தில் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். தேர்தெடுக்கப்படும் நபர்கள் நேரடி பணிநியமன அடிப்படையில் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப் படுவார்கள். Assistant Engineer மற்றும் Environmental Scientist பதவிகளுக்கு ரூ37,700 – 1,19,500/- ஊதியமாக வழங்கப்படும். Assistant மற்றும் Typist பதவிகளுக்கு ரூ19,500 – 62,000/- ஊதியமாக வழங்கப்படும்.

TNPCB வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் காலியிடங்கள்
Assistant Engineer 78
Environmental Scientist 70
Assistant (Junior Assistant) 38
Typist 56
மொத்தம் 242

TNPCB வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு:-

  • குறைந்த பட்ச வயது 18 ஆண்டுகள்
  • அதிகப் பட்ச வயது 30 ஆண்டுகள் (SC, SC(A), ST, MBC/ DNC, BC, BCM பிரிவினருக்கு 35 ஆண்டுகள்).
  • வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 12.02.2020.
  • மேலும் வயது தளர்வு விவரங்களை பெற TNPCB விளம்பரத்தை காணவும்.

கல்வித் தகுதி:- 

  • Assistant Engineer – அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Environmental Scientist – அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவியல் பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant (Junior Assistant) – இளநிலை பட்டம் மற்றும் டிப்ளமோ அல்லது ஆறு மாதம் கணினி கற்றுக்கொண்ட சான்றிதழ் வேண்டும்.
  • Typist – இளநிலை பட்டம், தட்டச்சு பயிற்சி தேர்வில் (ஆங்கிலம் & தமிழ்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் டிப்ளமோ அல்லது ஆறு மாதம் கணினி கற்றுக்கொண்ட சான்றிதழ் வேண்டும்.

பிற தகுதிகள்:-

  • தமிழில் போதுமான அறிவி பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்வும்.

தெரிவு செய்யும் முறை:-

  • இணைய வழித் தேர்வு (Online Examination)
  • நேர்காணல்/ திறன் தேர்வு (Interview/ Skill Test)

இணையவழித் தேர்வு விவரம்:-

  • Assistant Engineer மற்றும் Environmental Scientist பதவிகளுக்கு மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும் மற்றும் 180 கேள்விகள் கேட்கப்படும்.
  • Assistant மற்றும் Typist பதவிகளுக்கு இரண்டு மணி நேரம் தேர்வு நடைபெறும் மற்றும் 120 கேள்விகள் கேட்கப்படும்.
  • கேள்விகள் கேட்கப்படும் பாடங்களை தெரிந்து கொள்ள TNPCB அறிவிப்பை காணவும்.

தேர்வுக் கட்டணம்:-

  • OC, BC, BCM, MBC/ DNC பிரிவினர்களுக்கு – ரூ500/- தேர்வுக் கட்டணம்.
  • SC, SC(A), ST, மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதைவிகளுக்கு – ரூ250/- தேர்வுக் கட்டணம்.
  • தேர்வுக் கட்டணத்தை இணைய வழியில் (Net Banking / Credit Card / Debit Card) செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் TNPCB (www.tnpcb.gov.in) வலைதளத்திற்கு சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும்.
  • விண்ணப்பிப்பதற்கு நடப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், ஸ்கேன் செய்யப்பட்ட நிழற்படம், கையொப்பம் மற்றும் உரிய சான்றிதழ்கள் தேவைப்படுகிறது.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் Tamil Nadu Pollution Control Board (தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்)
அறிவிப்பு எண் NOTIFICATION.No. 02/2019
பதவிகள் Assistant Engineer, Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist
மொத்த காலியிடம் 242
பணியிடம் Tamil Nadu (தமிழ்நாடு)
சம்பளம்
  • ரூ37,700 – 1,19,500/-
  • ரூ19,500 – 62,000/-
கட்டணம் செலுத்தும் முறை Online (இணைய வழி)
விண்ணப்பிக்கும் முறை Online (இணைய வழி)
கடைசி நாள் 26.03.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்>>>

முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலை முரசு  வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு