இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 | ஆசிரியர் மற்றும் பதவிகள் | 05 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.01.2022
TNHRCE Recruitment 2022 | Teacher, Cook & other Posts | 05 Vacancies | Application Form | Last Date: 28.01.2022 | hrce.tn.gov.in
Latest TNHRCE Recruitment 2022 Notification – Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE) அதாவது தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு (வெ.ஆ.எண்.80/செ.ம.தொ.அ/2021) ஒன்றை 28.12.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்திகளின்படி தலைமை ஆசிரியர், ஆகம ஆசிரியர், எழுத்தர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 05 ஆகும். இந்த பதவிகளுக்கு காலியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தொகுப்பூதியமாக அவர்களது பதவிகளுக்கேற்ப ரூ. 10.000/- முதல் ரூ. 35,000/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பப் படிவத்தை (Application Form) இந்து சமய அறநிலையத்துறை வலைத்தளம் (hrce.tn.gov.in) சென்று பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.01.2022.
TNHRCE வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்
பதவிகள் (Posts) | காலியிடங்கள் (Vacancies) |
Headmaster | 01 |
Agama Teacher | 01 |
Clerk | 01 |
Cook | 01 |
Cooking Assistant | 01 |
மொத்தம் (Total) | 05 |
TNHRCE வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- நேர்காணல் (Interview)
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பப் படிவத்தினை (Application Form) TNHRCE வலைதளத்தில் (hrce.tn.gov.in) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
- முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் ஸ்ரீபெரும்புத்தூர் – 602 105, காஞ்சிபுரம் மாவட்டம்.
- விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 28.01.2022.
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் இதர விபரங்களை அலுவலக வேலை நேரத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNHRCE அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை – Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE) |
அறிவிப்பு எண் | வெ.ஆ.எண்.80/செ.ம.தொ.அ/2021 |
பதவிகள் | Headmaster, Agama Teacher, Clerk, Cook & Cooking Assistant |
காலியிடங்கள் | 05 |
ஊதியம் | ரூ. 10.000 – ரூ. 35,000/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 28.01.2022 |
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) / அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.