TNHB Recruitment 2021 | OA & Driver Vacancies | Apply Online

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வேலைவாய்ப்பு 2021 | அலுவலக உதவியாளர் & ஓட்டுநர் பதவிகள் | 15 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.02.2021

TNHB Recruitment

TNHB Recruitment 2021 | TN Housing Board | Office Assistant & Driver Posts | 15 Vacancies | Apply Online | Last Date: 28.02.2021 | tnhb.tn.gov.in

Latest TNHB Recruitment 2021 Notification – Tamilnadu Housing Board (TNHB) எனப்படும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (Notification No. PNT. 5/ 2643/ 2020) ஒன்றை 19.02.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி அலுவலக உதவியாளர் (Office Assistant) மற்றும் ஓட்டுநர் (Driver) பதவிகளுக்கு  காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆகும். இந்த பதவிகளுக்கு நேரடி நியமனம் (Direct Appointment) மூலம் காலியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், அலுவலக உதவியாளர் (Office Assistant) பதவிக்கு ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரையிலும் மற்றும் ஓட்டுநர் (Driver) பதவிக்கு ஊதியமாக ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையிலும் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் TNHB வலைதளத்தில் (tnhb.tn.gov.in) இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 28.02.2021. விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (Employment Exchange) பதிவு செய்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.

 TNHB வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 31/01/2021.
  • வயது தளர்வு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • அலுவலக உதவியாளர் (Office Assistant) பதவிக்கு விண்ணப்பிப்பவர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் (Driver) பதவிக்கு விண்ணப்பிப்பவர் தமிழ் மொழியில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் மூன்று ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • அலுவலக உதவியாளர் (Office Assistant) பதவிக்கு விண்ணப்பிப்பவர் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் (Driver) பதவிக்கு விண்ணப்பிப்பவர் ஓட்டுநர் உரிமம் (Driving License) பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனங்களை (HVD) ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TN Housing Board) அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TN Housing Board) அதிகாரப்பூர்வ வலைத்தளம் (tnhb.tn.gov.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 22.02.2021 முதல் 28.02.2021 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் – Tamilnadu Housing Board (TNHB)
அறிவிப்பு எண் PNT.5/ 2643/ 2020
பதவிகள் அலுவலக உதவியாளர் (Office Assistant)/ ஓட்டுநர் (Driver)
காலியிடங்கள் 15
ஊதியம்
  • Office Assistant – ரூ. 15,700 – 50,000/-
  • Driver – ரூ. 19,500 – 62,000/-
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு