TNFUSRC வேலைவாய்ப்பு 2020 | வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகள் | 320 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.02.2020
TNFUSRC Recruitment 2020 | Forest Guard & Forest Guard with Driving Licence | 320 Vacancies | Apply online | Last Date: 14.02.2020 | forests.tn.gov.in
Latest TNFUSRC Recruitment 2020 Notification – TNFUSRC என்று அழைக்கப்படும் Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee அதாவது தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பு எண் 2/2019, வெளியிட்டுள்ள தேதி 30.11.2019. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Forest Guard (வனக்காப்பாளர்) மற்றும் Forest Guard with Driving Licence (ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்) பதவிகளுக்கு மொத்தம் 320 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Forest Guard பதவிக்கு 227 காலியிடங்கள் மற்றும் Forest Guard with Driving Licence பதவிக்கு 93 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இணைய வழி (Online) வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். TNFUSRC வலைதளம் forests.tn.gov.in சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க கடைசி தேதி 14.02.2020. தேர்தெடுக்கப்படும் நபர்கள் நேரடி பணி நியமன அடிப்படியில் பணியமர்த்தப்படுவார்கள். அவ்வாறு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு குறைந்த பட்ச சம்பளமாக ரூ18,200 வழங்கப்படும்.
TNFUSRC வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு:-
- குறைந்தபட்ச வயது – 21 ஆண்டுகள்.
- அதிகபட்ச வயது – 30 ஆண்டுகள்.
- வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.07.2019.
- வயது தளர்வு விவரங்களை பெற TNFUSRC விளம்பரத்தை காணவும்.
கல்வித் தகுதி:-
- மேல்நிலை பள்ளிப்படிப்பில் (+2) (Physics, Chemistry, Biology, Zoology or Botany) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதிகளை தெரிந்துகொள்ள TNFUSRC விளம்பரத்தை காணவும்.
பிற தகுதிகள்:-
- Forest Guard with Driving Licence பதவிக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் TNFUSRC அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து விண்ணப்பிக்வும்.
தெரிவு செய்யும் முறை:-
- இணையவழி எழுத்துத் தேர்வு (Online Examination).
- சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification).
- உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு (Physical Standards Verification and Endurance Test).
தேர்வுக் கட்டணம்:-
- தேர்வுக் கட்டணம் 300/-
- SC/ST நபர்களுக்கு கட்டணம் 150/-
- கட்டணம் இணையவழி வாயிலாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:-
- விண்ணப்பிக்க விரும்புவோர் TNFUSRC (www.forests.tn.gov.in) வலைத்தளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
- முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 14.02.2020.
- விண்ணப்பிப்பதற்கு நடப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், ஸ்கேன் செய்யப்பட்ட நிழற்படம், கையொப்பம் மற்றும் உரிய சான்றிதழ்கள் தேவைப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNFUSRC அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம்) |
அறிவிப்பு எண் | 2/2019 |
பதவிகள் | Forest Guard (வனக்காப்பாளர்) & Forest Guard with Driving Licence (ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்) |
மொத்த காலியிடங்கள் | 320 |
பணியிடம் | தமிழ்நாடு |
சம்பளம் | Rs. 18,200/- to Rs.57,900/- |
கட்டணம் செலுத்தும் முறை | இணைய வழி (Online) |
விண்ணப்பிக்கும் முறை | இணைய வழி (Online) |
கடைசி நாள் | 14.02.2020 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு | இங்கு கிளிக் செய்யவும்>>> |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | இங்கு கிளிக் செய்யவும்>>> |
முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை பெற வேலை முரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள ஏழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.