TNCSC Recruitment 2021 | 1126 Vacancies | Application Form

TNCSC வேலைவாய்ப்பு 2021 | உதவுபவர், பட்டியல் எழுத்தர் & காவலர் பதவிகள் | 1126 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.12.2021

TNCSC Recruitment

TNCSC Recruitment 2021 | Record Clerk, Helper & Security Posts | 1126 Vacancies | Application Form | tncsc.tn.gov.in

Latest TNCSC Recruitment 2021 Notification – Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC) அதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை மண்டலம் வாரியாக வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்திகளின் படி தூத்துக்குடி (Thoothukudi), தஞ்சாவூர் (Thanjavur), தேனி (Theni), திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli) மற்றும் பெரம்பலூர் (Perambalur) மண்டலங்களில் நெல் கொள்முதல் பணிக்காக பட்டியல் எழுத்தர் (Record Clerk), உதவுபவர் (Helper) மற்றும் காவலர் (Security) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 1126. இந்த பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் பணிபுரிய தகுதியான ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக அகவிலைப்படி ரூ.2410 + ரூ.4049/- அல்லது ரூ.2359 + ரூ.4049/- வழங்கப்படும்.  விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இட ஒதுக்கீடு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தூத்துக்குடி, தஞ்சாவூர், தேனி, திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் மண்டலங்களில் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்புகள் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.

TNCSC வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

மண்டலம் (Zone) காலியிடங்கள் (Vacancies)
தூத்துக்குடி 450
தஞ்சாவூர் 450
திருச்சிராப்பள்ளி 141
பெரம்பலூர் 48
தேனி 37
மொத்தம் (Total) 1126

TNCSC வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 32 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/07/2021.
  • வயது தளர்வு விவரங்களை அறிய TNCSC அறிவிப்பைக் காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பட்டியல் எழுத்தர் (Record Clerk) பதவிக்கு விண்ணப்பிப்பவர் இளங்கலை அறிவியல் (B.Sc.) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • உதவுபவர் (Assistant) பதவிக்கு விண்ணப்பிப்பவர் +2 (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • காவலர் (Security) பதவிக்கு விண்ணப்பிப்பவர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • அந்தந்த மண்டலங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)
பதவிகள் பட்டியல் எழுத்தர் (Record Clerk), உதவுபவர் (Helper) மற்றும் காவலர் (Security)
காலியிடங்கள் 1126
பணியிடம் தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர்
ஊதியம் ரூ.2410/ ரூ.2359 + ரூ.4049/-
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2021
விண்ணப்பிக்க கடைசி நாள் (தஞ்சாவூர்) 01.12.2021
விண்ணப்பிக்க கடைசி நாள் (தூத்துக்குடி) 04.12.2021

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பங்களை (Application Form) அறிவிப்புகளில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க வேண்டிய முகவரி அந்ததந்த மண்டல அறிவிப்பில் பெற்றுக்கொள்ளவும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNCSC அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

தூத்துக்குடி அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
திருச்சிராப்பள்ளிஅதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
பெரம்பலூர் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
தேனி அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
தஞ்சாவூர் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு