தமிழ்நாடு வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2021 | ஊர்தி ஓட்டுநர் பதவி | 02 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.01.2021
TN Revenue Department Recruitment 2021 | Driver Posts | 02 Vacancies | Application Form | Last Date: 11.01.2021 | tn.gov.in
Latest TN Revenue Department Recruitment 2021 Notification – Commissionerate of Revenue Administration அதாவது வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு (எண் அ.ந.1(1)/ 50740/2019) ஒன்றை 26.12.2020 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் ஊர்தி ஓட்டுநர் (Driver) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 02 ஆகும். இந்த பதவிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு ஊதியமாக ரூ. 19,500 – ரூ. 62,000/- மற்றும் இதர படிகளும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை (Application Form) தமிழ்நாடு அரசு இணையதளத்தில் (tn.gov.in) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன் நேரில் அல்லது தபால் (Post) மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 11.01.2021 (3.00 PM). இட ஒதிக்கீடு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
தமிழ்நாடு வருவாய்த்துறை வேலைவாய்ப்புச் செய்தியின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
- அதிகப்பட்ச வயது 30 ஆண்டுகள்.
- வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/07/2020.
- வயது தளர்வு விவரங்களை பற்றி அறிய வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அறிவிப்பை காணவும்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- செல்லத்தக்க இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- ஊர்தி ஓட்டுவதில் குறையாமல் இரண்டு ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிற தகுதிகள் (Other Qualification):-
- சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த ஊர்தி ஓட்டுநர் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்வும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- நேர்காணல் (Interview).
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் தமிழ்நாடு அரசு வலைதளம் (gov.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
- விண்ணப்பத்தினை அனுப்பும் தபால் உரையில் “ஊர்தி ஓட்டுநர் பதவிக்கான விண்ணப்பம்” என தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும்.
- அஞ்சல் முகவரி: இணை ஆணையர் (வருவாய் நிருவாகம்), 3வது மாடி, எழிலகம் பிரதான கட்டிடம், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை – 5.
- விண்ணப்பங்களை 11/01/2021 தேதி பிற்பகல் 3:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
நிறுவனம் | வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் (Commissionerate of Revenue Administration and Disaster Management) |
பதவிகள் | ஊர்தி ஓட்டுநர் (Driver) |
காலியிடம் | 02 |
பணியிடம் | சென்னை |
ஊதியம் | ரூ.19,500 – ரூ.62,000/- |
விண்ணப்பிக்கும் முறை | நேரில்/ தபால் (Post) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 11.01.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.