தமிழ்நாடு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு 2020 | தொழில்பழகுநர் பயிற்சி | 280 காலியிடங்கள் | தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
TN PWD Recruitment 2020 | Public Works Department | Graduate & Diploma Apprentices | 280 Vacancies | Shortlisted Candidates List | tnpwd.com
Latest TN PWD Recruitment 2020 Notification – Tamilnadu Public Works Department (TN PWD) அதாவது தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் தொழில் பழகுநர் பயிற்சி (Apprenticeship Training) பெறுவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சிக்காகவும் (Graduate Apprentices) மற்றும் பட்டய படிப்பு (Diploma) முடித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சிக்காகவும் (Technician (Diploma) Apprentice) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு 120 காலியிடங்களும் மற்றும் பட்டய படிப்பு (Diploma) முடித்தவர்களுக்கு 160 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கிய அறிவிப்பு:- கல்வித்தகுதியின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியல் தென்னக தொழில்பழகுநர் பயிற்சி வாரிய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பங்கேற்க அழைப்புக் கடிதம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் முதலில் NATS வலைதளத்தில் இணைய வழியில் (Online) பதிவு (Enrollment) செய்ய வேண்டும். பிறகு அந்த பதிவு விவரங்களைக் கொண்டு தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் (TN PWD) தொழில்பழகுநர் பயிற்சிக்கு (Apprenticeship Training) விண்ணப்பிக்க வேண்டும். NATS வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி 07.11.2020. தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.11.2020. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் 20.11.2020 தேதி அன்று வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் 01.12.2020 தேதி முதல் 04.12.2020 தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள். இந்த ஓர் ஆண்டு பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.4,984 (Graduate Apprentices) மற்றும் ரூ.3,542 (Technician (Diploma) Apprentice) வழங்கப்படும்.
தமிழ்நாடு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்
பிரிவுகள் (Discipline) | காலியிடங்கள் (Vacancies) |
Graduate Apprentices |
|
Electrical & Electronics Engineering | 05 |
Electronics & Communication Engineering | 05 |
Civil Engineering | 110 |
மொத்தம் (Total) | 120 |
Technician (Diploma) Apprentices |
|
Electrical & Electronics Engineering | 05 |
Electronics & Communication Engineering | 05 |
Civil Engineering | 150 |
மொத்தம் (Total) | 160 |
ஆக மொத்தம் (Grand Total) | 280 |
மேலே கொடுக்கப்பட்டுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை boat-srp.com என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பொதுப்பணித் துறை தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பில் உள்ள தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- தொழில் பழகுநர் பயிற்சி விதிமுறைகளின் படி வயது வரம்பு பின்பற்றப்படும்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- Graduate Apprentices – பொறியியல் (Engineering) அல்லது தொழில்நுட்பப் (Technology) பாடப் பிரிவுகளில் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.
- Technician (Diploma) Apprentices – பொறியியல் (Engineering) அல்லது தொழில்நுட்பப் (Technology) பாடப்பிரிவுகளில் பட்டய படிப்பு (Diploma) முடித்திருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை (Selection Procedure):-
- கல்வித்தகுதிகளை பொறுத்து விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் முதலில் தொழில்பழகுநர் பயிற்சி வாரியத்தின் NATS என்று சுருக்கமாக அழைக்கப்படும் National Apprenticeship Training Scheme வலைதளத்தில் (mhrdnats.gov.in) இணைய வழியில் (Online) பதிவு செய்ய வேண்டும். NATS வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 07.11.2020.
- பிறகு பதிவு செய்யப்பட்ட விவரங்களைக் கொண்டு அதே வலைதளத்தில் தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் (Public Works Department, Tamilnadu) தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.11.2020.
இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TN PWD அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | தமிழ்நாடு பொதுப்பணித் துறை (Tamil Nadu Public Works Department) |
பயிற்சி | தொழில் பழகுநர் பயிற்சி (Apprenticeship Training) |
காலியிடங்கள் | 280 |
சம்பளம் |
|
விண்ணப்பிக்கும் முறை | இணைய வழி (Online) |
பதிவு செய்ய கடைசி நாள் | 07.11.2020 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 15.11.2020 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
தெரிவு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் (Shortlisted Candidates List) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.