TN MRB Recruitment 2021 | LT Vacancies | Apply Online

TN MRB வேலைவாய்ப்பு 2021 | ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பதவி | 19 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.11.2021

TN MRB Recruitment

TN MRB Recruitment 2021 | Laboratory Technician Post | 19 Vacancies | Apply Online | Last Date: 30.11.2021 | mrb.tn.gov.in

Latest TN MRB Recruitment 2021 Notification – Tamilnadu Medical Services Recruitment Board (TN MRB) அதாவது தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு (06/ MRB/ 2021) 09.11.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்திகளின் படி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துணை சேவையில் (Tamil Nadu Food Safety subordinate Service) பணிபுரிய ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Laboratory Technician Grade – II) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 19. இந்த பதவிக்கு நேரடி நியமனம் (Direct Recruitment) மூலம் காலியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் TN MRB வலைதளம் (mrb.tn.gov.in) சென்று இணைய வழி (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.11.2021. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தற்காலிக அடிப்படையில் (Temporary Basis) பணி அமர்த்தப்படுவார்கள். இட ஒதுக்கீடு பற்றி விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

TN MRB வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 32 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/07/2021.
  • வயது தளர்வு விவரங்களை அறிய TN MRB அறிவிப்பைக் காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • இளநிலை (வேதியியல்/ உயிர் வேதியியல்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மருத்துவ ஆய்வகம் தொழில்நுட்பவியலாளர் பட்டயப் படிப்பில் (Diploma in Medical Laboratory Technician Course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • மதிப்பெண் அடிப்படை

சேவை கட்டணம் (Fee / Service charges):-

  • ரூ.600/- இணைய வழி (Online) மூலம் செலுத்தலாம்.
  • SC/ SCA/ ST/ DAP (PH) பிரிவினர் ரூ.300/- செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் TN MRB வலைதளம் (mrb.tn.gov.in) சென்று இணைய வழி (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு புகைப்படும் (Photograph) மற்றும் கையொப்பம் (Signature) தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.11.2021.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TN MRB அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் – Tamilnadu Medical Services Recruitment Board (TN MRB)
அறிவிப்பு எண் 06/ MRB/ 2021
பதவிகள் Laboratory Technician Grade – II
காலியிடங்கள் 19
ஊதியம் ரூ.35,400 – ரூ. 1,12,400/-
கட்டணம் செலுத்தும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2021
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு