TN Income Tax Department Recruitment 2021 | 38 Tax Assistant and other Vacancies | Apply Online

வருமான வரித்துறை தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021 | Sports Quota (2020-21) | வருமான வரி ஆய்வாளர் மற்றும் சில பதவிகள் | 38 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.01.2021

TN Income Tax Department Recruitment

TN Income Tax Department Recruitment 2021 | Sports Quota (2020-21) | Tax Assistant, IT Inspector & MTS Posts | 38 Vacancies | Apply Online | Last Date: 17.01.2021 | tnincometax.gov.in

Latest TN Income Tax Department Recruitment 2021 Notification – Income Tax Department, Tamilnadu அதாவது வருமான வரித்துறை, தமிழ்நாடு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 04.01.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி வருமான வரி ஆய்வாளர் (Inspector of Income Tax), வரி உதவியாளர் (Tax Assistant) மற்றும் Multi-tasking Staff பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆகும். இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், இந்த பணிகளுக்கு ரூ.5,200 முதல் ரூ.34,800 வரை ஊதியம் வழங்கப்படும். தேர்தெடுக்கப்படும் நபர்கள் தமிழ்நாடு/ புதுச்சேரியில் பணி அமர்த்தப்படுவர். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தமிழ்நாடு வருமான வரித்துறை வலைதளத்திற்கு (tnincometax.gov.in) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17.01.2021. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண். 044 – 28338313.

வருமான வரித்துறை தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்தியின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Inspector of Income Tax 12
Tax Assistant 16
Multi-tasking Staff 10
மொத்தம் (Total) 38

தமிழ்நாடு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகப்பட்ச வயது 25 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.04.2020.
  • வயது தளர்வு விவரங்களை பெற தமிழ்நாடு வருமான வரித்துறை செய்தியை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • வருமான வரி ஆய்வாளர் (Inspector of Income Tax) மற்றும் வரி உதவியாளர் (Tax Assistant) பதவிகளுக்கு இளநிலை பட்டம் அல்லது இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Multi-tasking Staff பதவிக்கு மெட்ரிகுலேசன் அல்லது இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி (Sports Qualification):-

  • விண்ணப்பதாரர் 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் அவர்கள் பங்கேற்றதன் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பீடு செய்யப்படும்.
  • விண்ணப்பதாரர் 2017, 2018, 2019, மற்றும் 2020 ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் மூன்று சிறந்த போட்டிகளிலிருந்து மதிப்பீடு செய்யப்படும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் தமிழ்நாடு வருமான வரித்துறை அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்வும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • விண்ணப்பதாரர் அவர்கள் விளையாட்டுகளின் சாதனையின் (Achievement in Sports) அடிப்படையிலும் மற்றும் கள சோதனைகள் (Field Trials) அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு வருமான வரித்துறை வலைதளத்திற்கு (tnincometax.gov.in) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, சாதிச் சான்றிதழ் மற்றும் விளையாட்டுச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும்.
  • இணைய வழி (Online) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17/01/2021.
நிறுவனம் வருமான வரித்துறை, தமிழ்நாடு
பதவிகள் Inspector of Income Tax, Tax Assistant & Multi-tasking Staff
காலியிடங்கள் 38
பணியிடங்கள் தமிழ்நாடு / புதுச்சேரி
ஊதியம் ரூ.5,200 – ரூ.34,800/-
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 17.01.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application)/ இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு