TMB Recruitment 2021 | New Vacancies | Apply Online

TMB வேலைவாய்ப்பு 2021 | மேலாளர் பதவிகள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.07.2021

TMB Recruitment

TMB Recruitment 2021 | DGM & AGM Posts | Apply Online | Last Date: 30.07.2021 | tmb.in

Latest TMB Recruitment 2021 Notification – Tamilnad Mercantile Bank அதாவது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி துணை பொது மேலாளர் (Deputy General Manager) மற்றும் துணை பொது மேலாளர் (Deputy General Manager)/ உதவி பொது மேலாளர் (Assistant General Manager) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் வழக்கமான முறை (Regular)/ ஒப்பந்த (Contract) அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

ஒப்பந்த (Contract) அடிப்படையில் பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக (Consolidated Pay) ரூ.1,25,000/- மற்றும் வழக்கமான முறையில் (Regular) பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.1,59,000/- வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வலைதளத்திற்கு (tmb.in) சென்று இணைய வழி (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 30.07.2021.

TMB வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • DGM (Operations/ Administration) பதவிக்கு குறைந்தபட்ச வயது 45 ஆண்டுகள் மற்றும் அதிகப்பட்ச வயது 55 ஆண்டுகள்.
  • AGM (Operations/ Administration) பதவிக்கு அதிகப்பட்ச வயது 53 ஆண்டுகள்.
  • DGM (Risk Management/ Integrated Treasury/ Credit) பதவிக்கு குறைந்தபட்ச வயது 45 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 30/06/2021.

தேவைப்படும் தகுதி (Required Qualification):- 

  • DGM/ AGM (Operations/ Administration) – வங்கி சார்ந்த தகுதியுடன் (Banking Professional Qualification) பட்ட படிப்பு (Graduate) அல்லது பட்டமேற்படிப்பு (Post Graduate) முடித்திருக்க வேண்டும்
  • DGM (Risk Management/ Integrated Treasury/ Credit) – அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள துறைகளில் பொது அல்லது தனியார் துறை வங்கிகளில் உதவி பொது மேலாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவி வகித்திருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள துறைகளில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் TMB அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்வும்

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வலைதளத்திற்கு (tmb.in) சென்று இணைய வழி (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் நகல்களை பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 30/07/2021.
  • விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank)
பதவிகள் Deputy General Manager & Assistant General Manager
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.07.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்பிக்க (Online Application இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு