Thoothukudi District Government Jobs 2020 | Latest Vacancies | Application Form

தூத்துக்குடி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2020 | புறத்தொடர்பு பணியாளர் பதவி | 01 காலியிடம் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.11.2020

Thoothukudi District Government Jobs

Thoothukudi District Government Jobs 2020 | Outreach Worker Post | 01 Vacancy | Application Form | Last Date: 18.11.2020 | thoothukudi.nic.in

Latest Thoothukudi District Government Jobs 2020 Notification – தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) பணிக்கு 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தூத்துக்குடி மாவட்ட அரசு அதிகாரப்பூர்வ வலைதளம் (thoothukudi.nic.in) சென்று விண்ணப்பத்தினை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18.11.2020. இந்த பணிக்கு குழந்தை தொடர்பான துறையில் சான்றிதழ் படிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி புறத்தொடர்பு பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.8,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒப்பந்த (Contract) பணிநியமன அடிப்படையில் பணி வழங்கப்படும்.

தூத்துக்குடி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகப் பட்ச வயது 40 ஆண்டுகள்.

கல்வித் தகுதி (Educational Qualification):-

  • 10th/ 12ஆம் வகுப்பு தேர்ச்சி.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • குழந்தை தொடர்பான பணித் துறையில் 01 வருட அனுபவம்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • thoothukudi.nic.in என்ற தூத்துக்குடி மாவட்ட அரசு அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும். பின் Notices என்பதில் Recruitmentஐ தேர்வு செய்யவும்.
  • பிறகு “Applications are invited for the post of one Outreach Worker in District Child Protection Unit, Thoothukudi “, என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும். அதில் View என்று கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தினை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றுகளை இணைத்து அஞ்சல் மூலமாக 18.11.2020 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
  • அஞ்சல் முகவரி – மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 176, முத்துச் சுரபி பில்டிங், மணிநகர் 2வது தெரு, பாளை ரோடு, தூத்துக்குடி – 628003.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் தூத்துக்குடி மாவட்ட அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு (Thoothukudi District Child Protection Unit)
பதவி புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker)
காலியிடம் 01
பணியிடம் தூத்துக்குடி (Thoothukudi)
ஊதியம் ரூ.8,000/-
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
விண்ணப்பிக்க கடைசி நாள் 18.11.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு