TANGEDCO வேலைவாய்ப்பு 2020 | தமிழ்நாடு மின்சார வாரியம் | உதவி பொறியாளர் & இளநிலை உதவியாளர் பதவிகள் | 1100 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.03.2020 & 16.03.2020
TNEB TANGEDCO Recruitment 2020 | Assistant Engineer & Jr. Assistant Posts | 1100 Vacancies | Apply Online | Last Date: 09.03.2020 & 16.03.2020 | tangedco.gov.in
Latest TNEB TANGEDCO Recruitment 2020 Notification – TANGEDCO என்று அழைக்கப்படும் Tamil Nadu Generation and Distribution Corporation Limited அதாவது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தற்போது இரண்டு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவுப்புகளின்படி Assistant Engineer (உதவி பொறியாளர்) மற்றும் Junior Assistant /Accounts (இளநிலை உதவியாளர்) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி பொறியாளர் பதவிக்கு 600 காலியிடங்களும் இளநிலை உதவியாளர் பதவிக்கு 500 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் TANGEDCO (www.tangedco.gov.in) வலைதளத்திற்கு சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் உதவி பொறியாளர் பதவிக்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 16.03.2020 மற்றும் இளநிலை உதவியாளர் பதவிக்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 09.03.2020. உதவி பொறியாளர் பதவிக்கான அறிவிப்பு (04/2020) 15.02.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர் பதவிக்கான அறிவிப்பு (03/2020) 08.01.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது. உதவி பொறியாளர் பதவிக்கு தேர்தெடுக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதம் ரூ 39800 – 126500 மற்றும் இளநிலை உதவியாளர் பதவிக்கு ரூ 19500-62000 சம்பள விகிதமாக வழங்கப்படும். தேர்தெடுக்கப்படும் நபர்கள் நேரடி பணிநியமன (Direct Recruitment) அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழ்நாடு மின்சார வாரிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்களின் விவரம்
பதவிகள் | காலியிடங்கள் |
Junior Assistant /Accounts | 500 |
Assistant Engineer (Electrical) | 400 |
Assistant Engineer (Mechanical) | 125 |
Assistant Engineer (Civil) | 75 |
மொத்தம் | 1100 |
தமிழ்நாடு மின்சார வாரிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு:-
- குறைந்த பட்ச வயது 18 ஆண்டுகள்.
- அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
- வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.07.2019.
- வயது தளர்வு விவரங்களை பெற TANGEDCO விளம்பரத்தை காணவும்.
கல்வித் தகுதி:-
- உதவி பொறியாளர் – அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடங்களில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- இளநிலை உதவியாளர் – B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் கல்வித் தகுதிகளை தெரிந்து கொள்ள ஆவின் விளம்பரத்தை காணவும்.
பிற தகுதிகள்:-
- தமிழ் மொழியில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் தமிழ்நாடு மின்சார வாரிய அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து விண்ணப்பிக்வும்.
தெரிவு செய்யும் முறை:-
- Online Test (இணையவழித் தேர்வு)
- Certificate Verification (சான்றிதழ் சரிபார்ப்பு)
இணையவழித் தேர்வு விவரம்:-
- மூன்று பகுதிகளாக (பகுதி-I, பகுதி-II & பகுதி-III) தேர்வு நடத்தப்படும்.
- 100 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் தேர்வு நடத்தப்படும்.
- முதல் பகுதிக்கு 20 மதிப்பெண்களும், இரண்டாம் பகுதிக்கு 20 மதிப்பெண்களும் மற்றும் மூன்றாம் பகுதிக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
தேர்வுக் கட்டணம்:-
- OC, BCO, BCM, MBC/ DC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ 1000/-
- SC/ SCA/ ST விண்ணப்பதாரர்களுக்கு – ரூ 500/-
- ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு – ரூ 500/-
- விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும் (Net Banking/ Debit Card/ Credit Card) செலுத்தலாம் வங்கி மூலமாகவும் (Canara Bank/ Indian Bank/ Indian Overseas Bank) செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:-
- விண்ணப்பிக்க விரும்புவோர் TANGEDCO (www.tangedco.gov.in) வலைதளத்திற்கு சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும்.
- விண்ணப்பிப்பதற்கு நடப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், ஸ்கேன் செய்யப்பட்ட நிழற்படம், கையொப்பம் மற்றும் உரிய சான்றிதழ்கள் தேவைப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | Tamil Nadu Generation and Distribution Corporation Limited (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்) |
அறிவிப்பு எண் | 04/2020 & 03/2020 |
பதவிகள் | Assistant Engineer (உதவி பொறியாளர்) & Junior Assistant/ Accounts (இளநிலை உதவியாளர்) |
மொத்த காலியிடம் | 1100 |
தேர்வு முறை | Online Test |
பணியிடம் | Tamil Nadu |
சம்பளம் |
|
கட்டணம் செலுத்தும் முறை | Online/ Offline |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கடைசி நாள் |
|
உதவி பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க | இங்கு கிளிக் செய்யவும்>>> |
இளநிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க | இங்கு கிளிக் செய்யவும்>>> |
முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை பெற வேலை முரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள ஏழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.