TAHDCO Recruitment 2020 | AE (Civil) Vacancies | Apply Online

TAHDCO வேலைவாய்ப்பு 2020 | உதவி பொறியாளர் பதவி | 10 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 19.12.2020

TAHDCO Recruitment

TAHDCO Recruitment 2020 | Assistant Engineer (Civil) Post | 10 Vacancies | Apply Online | Last Date: 19.12.2020 | tahdco.com

Latest TAHDCO Recruitment 2020 Notification – Tamilnadu Adi Dravidar Housing and Development Corporation Limited (TAHDCO) அதாவது தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு (Notification No. A2/78/2016) ஒன்றை 17/11/2020 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி உதவி பொறியாளர் [Assistant Engineer (Civil)] பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 10 ஆகும். இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் TAHDCO வலைதளத்திற்கு (tahdco.com) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 19.12.2020. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு ரூ.36,400 முதல் ரூ. 1,15,700 வரை ஊதியம் வழங்கப்படும். இடஒதிக்கீடு காலியிடங்கள் பற்றி அறிய TAHDCO அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை காணவும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் 044 – 24310130, 7448828512.

TAHDCO வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/07/2020.
  • வயது தளர்வு விவரங்களை அறிய TAHDCO அறிவிப்பைக் காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • குடிமுறைப் பொறியியல் (Civil Engineering)/ குடிமுறை மற்றும் கட்டமைப்பு பொறியியலில் (Civil & Structural Engineering) இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்க வேண்டும்

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • இணையவழி எழுத்துத் தேர்வு (Online Written Test).
  • நேர்காணல் (Interview).

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • இணைய வழி எழுத்துத் தேர்வானது (Online Written Test) இணைய (Online) வழியாக மொத்தம் 270 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நடைபெறும்.
  • இதில் பகுதி ஒன்றில் (Part-I) பாடத்திட்டத்திலிருந்து (Exam Syllabus) 180 மதிப்பெண்களுக்கு Objective Test அடிப்படையில் இரண்டு மணி நேரம் நடைபெறும்.
  • பகுதி இரண்டில் (Part-II) General Studies (Degree Standard) மற்றும் திறமை மற்றும் மன திறன் (Aptitude and Mental Ability) தொடர்பாக 90 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் நடைபெறும்.

தேர்வு பாடத்திட்டம் (Exam Syllabus):-

  • Building Materials and Construction Practices
  • Engineering Survey
  • Strength of Materials
  • Structural Analysis
  • Geo technical Engineering
  • Environmental Engineering and Pollution Control
  • Design of Reinforced Concrete, prestressed Concrete and Steel Structures
  • Project Management and Estimating
  • General Knowledge – New construction materials & Construction practices

தேர்வுக் கட்டணம் (Examination Fee)/ பதிவுக் கட்டணம் (Registration Fee):-

  • பதிவுக் கட்டணம் ரூ.400/- மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.400/- இணைய வழி (Internet Banking/ Credit Card/ Debit Card) மூலம் செலுத்தலாம்.
  • SC/ SC(A)/ ST/ மாற்றுத்திறனாளிகள்/ ஆதரவற்ற விதவைகளுக்கு பதிவுக் கட்டணம் ரூ.400/- மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் TAHDCO வலைதளத்திற்கு (tahdco.com) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு ஸ்கேன் (Scan) செய்த புகைப்படம் (Photograph), கையொப்பம் Signature), மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்கள் நகலை தயாராக CD/ DVD/ Pen Drive-ல் வைத்திருக்க வேண்டும்.
  • புகைப்படம் (Photograph) அல்லது கையொப்பம் (Signature) பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) 19/12/2020 தேதி இரவு 11:59 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TAHDCO அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (Tamilnadu Adi Dravidar Housing and Development Corporation Limited)
அறிவிப்பு எண் Notification No. A2/78/2016
பதவிகள் உதவி பொறியாளர் [Assistant Engineer (Civil)]
காலியிடங்கள் 10
பணியிடம் தமிழ்நாடு
ஊதியம் ரூ.36,400 – ரூ. 1,15,700 /-
கட்டணம் செலுத்தும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 19.12.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு