SSC MTS Exam 2021 | MTS Vacancies | Apply Online

SSC MTS தேர்வு 2021 அறிவிப்பு | Multi-Tasking பணியாளர் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.03.2021

SSC MTS Exam

SSC MTS Exam 2021 | Multi-Tasking Staff Post | Apply Online | Last Date: 21.03.2021 | ssc.nic.in

Latest SSC MTS Exam 2021 Notification – SSC என்று அழைக்கப்படும் Staff Selection Commission அதாவது பணியாளர் தேர்வு ஆணையம் 2020 ஆம் ஆண்டிற்கான Multi Tasking (Non-Technical) Staff – MTS தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாகவுள்ள பதவிகள் நிரப்பப்படவுள்ளது. இந்த தேர்வுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும். இந்த தேர்விற்க்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் Tier I தேர்வானது 01.07.2021 முதல் 20.07.2021 வரை நடைபெறும் மற்றும் Tier-II தேர்வானது 21.11.2021 அன்று நடைபெறும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் SSC வலைதளத்திற்கு (ssc.nic.in) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 21.03.2021.

SSC MTS வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 25/27 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/01/2021.
  • வயது தளர்வு விவரங்களைப் பெற SSC MTS விளம்பரத்தை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • மெட்ரிகுலேசன் அல்லது இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • Computer Based Examination: முதல் பகுதி (Paper-I).
  • Descriptive Paper: இரண்டாம் பகுதி (Paper-II).

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • தேர்வானது இரண்டு பிரிவுகளாக (Paper – I & Paper – II) நடைபெறும்.
  • முதற்கட்ட தேர்வு Objective Test அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு 90 நிமிடங்கள் நடைபெறும்.
  • இரண்டாம் கட்ட தேர்வு 50 மதிப்பெண்களுக்கு 30 நிமிடங்கள் நடைபெறும்.

தேர்வு பாடத்திட்டம் (Exam Syllabus):-

  • English Language.
  • General Intelligence and Reasoning.
  • Numerical Aptitude.
  • General Awareness.

விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-

  • விண்ணப்பக் கட்டணம் ரூ.100 இணைய வழி (Online) மூலம் அல்லது SBI வங்கி கிளைகளில் செலுத்த வேண்டும்.
  • பெண்கள்/ SC/ ST/ PwD/ ESM பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • இணைய வழியில் கட்டணம் செலுத்த கடைசி நாள் 23.03.2021.
  • SBI வங்கி கிளைகளில் கட்டணம் செலுத்த கடைசி நாள் 29.03.2021. பணம் செலுத்துவதற்கான சீட்டை (Challan) பதிவிறக்கம் (Download) செய்ய கடைசி நாள் 25.03.2021.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் SSC வலைதளத்திற்கு (ssc.nic.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • முதலில் அடிப்படை விவரங்களை கொண்டு இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். பிறகு பதிவு விவரங்களை கொண்டு இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு தற்போதைய புகைப்படம் (Photograph) தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) முழுமையாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 21/03/2021.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் SSC MTS அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் பணியாளர் தேர்வு ஆணையம் – Staff Selection Commission (SSC)
அறிவிப்பு எண் F.No. 3/5/2020 – P&P-I (Vol-I)
பதவிகள் பின்னர் அறிவிக்கப்படும்
தேர்வு Multi-Tasking Staff (MTS)
தேர்வு நாள்
  • Tier I : 01.07.2021 – 20.07.2021
  • Tier-II: 21.11.2021
கட்டணம் செலுத்தும் முறை இணைய வழி (Online)/ SBI வங்கி கிளைகள்
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 21.03.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு