Spices Board Recruitment 2021 | New Vacancies | Application Form

Spices Board வேலைவாய்ப்பு 2021 | தொழில்நுட்ப பகுப்பாய்வாளர் பதவி | 06 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 18.06.2021

Spices Board Recruitment

Spices Board Recruitment 2021 | Technical Analyst Post | 06 Vacancies | Application Form | Last Date: 18.06.2021 | indianspices.com

Latest Spices Board Recruitment 2021 Notification – Spices Board India தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 21.05.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி தொழில்நுட்ப பகுப்பாய்வாளர் (Technical Analyst) பதவிக்கு காலியிடங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை 06. இதில் 02 காலியிடங்கள் சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கு ஒப்பந்த (Contract) பணிநியமன அடிப்படையில் ஒரு வருடம் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக (Consolidated Pay) மாதம் ரூ.30,000/- வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் இந்திய Spices Board வலைதளத்திற்கு (indianspices.com) சென்று விண்ணப்பப் படிவத்தினை (Application form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்த படிவத்தினை மின்னஞ்சல் (E-mail) மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18.06.2021. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் குறிப்பாக சென்னை கும்மிடிப்பூண்டியில் பணி அமர்த்தப்படுவார்கள்.

Spices Board வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நாள் 18.06.2021.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • வேதியியலில் (Chemistry/ Applied Chemistry/ Analytical Chemistry/ Organic Chemistry) முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • நுண்ணறிவியலில் (Microbiology/ Food Microbiology/ Applied Microbiology) முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • குறைந்தபட்சம் 02 வருடங்கள் உணவு தர சோதனை ஆய்வகத்தில் (Food testing lab) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • எழுத்துத் தேர்வு (Written test).
  • எழுத்துத் தேர்விற்கான (Written test) நேரம், தேதி மற்றும் இடம் அதிகாரபூர்வ வலைதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • எழுத்துத் தேர்வானது கொள்குறி வினாக்கள் (Multiple Choice Questions) அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். தேர்வானது இரண்டு மணி நேரம் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) Spices Board India வலைதளத்திற்கு (indianspices.com) சென்று பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஸ்கேன் (Scan) செய்யப்பட்ட கல்வித்தகுதி சான்றிதழ், சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படும் (Passport Size Photograph), தற்குறிப்பு (Resume), அனுபவச் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து PDF முறையில் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • சென்னையில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி, sbchennairecruitment@gmail.com.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18/06/2021.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்  வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் இந்திய Spices Board அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் Spices Board India
பதவிகள் தொழில்நுட்ப பகுப்பாய்வாளர் (Technical Analyst)
காலியிடங்கள் 06
பணியிடம் குறிப்பாக சென்னை கும்மிடிப்பூண்டி
ஊதியம் ரூ.30,000/-
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல் (E-mail)
விண்ணப்பிக்க கடைசி நாள் 18.06.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு