Southern Railway Recruitment 2021 | Sports Quota Vacancies | Application Form

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 | 21 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.11.2021

Southern Railway Recruitment 2020

Southern Railway Recruitment 2021 | Sports Quota | 21 Vacancies | Application Form | Last Date: 30.11.2021 | rrcmas.in

Latest Southern Railway Recruitment 2021 Notification –Southern Railway அதாவது தெற்கு ரயில்வே தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி விளையாட்டுத் துறையில் (Sports Quota) சிறந்து விளங்குபவர்களுக்கு  காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 21. இந்த  பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.19,900/- முதல் ரூ. 29,200/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) தெற்கு ரயில்வே வலைதளத்திற்கு (rrcmas.in) சென்று பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.11.2021.

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 25 ஆண்டுகள்.

விளையாட்டு தகுதி (Sports Qualification):- 

  • அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருக்க வேண்டும் அல்லது உலகக் கோப்பை/ உலக சாம்பியன்ஷிப்/ காமன்வெல்த் விளையாட்டு/ இளைஞர்கள் ஒலிம்பிக் ஒன்றில் 3 வது இடம் பிடித்திருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • கள சோதனை (Trial)
  • நேர்காணல் (Interview)

கட்டணம் (Fee):-

  • கட்டணம் ரூ. 500/- (கள சோதனையில் பங்கேற்கும் நபர்களுக்கு ரூ. 400/- திருப்பி செலுத்தப்படும்).
  • SC/ ST/ Women/Ex. Servicemen/ PWD/ சிறுபான்மையினர் – ரூ. 250/- (கள சோதனையில் பங்கேற்கும் நபர்களுக்கு ரூ. 250/- திருப்பி செலுத்தப்படும்).
  • கட்டணத்தை வரைவோலை [Demand Draft (DD)] மூலம் செலுத்த வேண்டும்.
  • வரைவோலை விவரங்களை தெற்கு ரயில்வே விளம்பரத்தில் பெற்று கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) தெற்கு ரயில்வே வலைதளத்திற்கு (rrcmas.in) சென்று பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து பின்வரும் முகவரிக்கு அலுவலக வளாகத்தில் உள்ள பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • முகவரி: The Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Southern Railway, 3rd Floor, No 5 Dr.P.V.Cherian Crescent Road, Egmore, Chennai – 600 008.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.11.2021 (5.00 PM).

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தெற்கு ரயில்வே – Southern Railway
காலியிடங்கள் 21
ஊதியம் ரூ.19,900 – ரூ. 29,200/-
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2021
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு