Sivagangai District Government Jobs 2020 | 60 Village Assistant Vacancies | Application Form

சிவகங்கை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2020 | கிராம உதவியாளர் பணி | 60 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.11.2020

Sivagangai District Government Jobs

Sivagangai District Government Jobs 2020 | Village Assistant Post | 60 Vacancies | Application Form | Last Date 20.11.2020 | sivaganga.nic.in

Latest Sivagangai District Government Jobs 2020 Notification – சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான வேலைவாய்ய்பு அறிவிப்பு (ந.க.அ6/ 15249/ 2020) 29.10.2020 தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி கிராம உதவியாளர் (Village Assistant) பதவிக்கு மொத்தமாக 60 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால்/ நேரிடையாக அனுப்பிட வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 20.11.2020.

விண்ணப்பப் படிவத்தினை (Application Form) சிவகங்கை மாவட்ட அரசு வலைதளத்தில் (sivaganga.nic.in) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். இந்த பணிக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காளையார் கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டங்களில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி கிராம உதவியாளர் பதவிக்கு ஊதியமாக ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும்.

சிவகங்கை மாவட்ட  அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்த பட்ச வயது 21 ஆண்டுகள்.
  • அதிகப் பட்ச வயது 30 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.07.2020.
  • மேலும் வயது தளர்வு விவரங்களை பெற சிவகங்கை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு விளம்பரத்தை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):-

  • 5ஆம் வகுப்பு தேர்ச்சி.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் கிராமத்தில்/ வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
  • மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள்  சிவகங்கை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலேயே நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • sivaganga.nic.in என்ற சிவகங்கை மாவட்ட அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  • பின் Notices என்பதில் Recruitmentஐ தேர்வு செய்யவும்.
  • பின் “Village Assistant Recruitment – Notification “, என்ற விளம்பரத்தை காணவும்.
  • அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தினை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் இணைத்து விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க விரும்பும் வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால்/ நேரிடையாக 20.11.2020 தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிட வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் சிவகங்கை மாவட்ட  அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் சிவகங்கை மாவட்ட  அரசு (Sivagangai District Government)
அறிவிப்பு எண் ந.க.அ6/ 15249/ 2020
பதவி கிராம உதவியாளர் (Village Assistant)
காலியிடங்கள் 60
பணியிடம் சிவகங்கை மாவட்டம்
ஊதியம் ரூ.11,100 – 35,100/- (Special  Time  Scales  of  Pay  Matrix  Level  6)
விண்ணப்பிக்கும் முறை நேரடியாக/ அஞ்சல்
விண்ணப்பிக்க கடைசி நாள் 20.11.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு  வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு