SIDBI வேலைவாய்ப்பு 2021 | ஆலோசகர்கள் மற்றும் பதவிகள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.02.2022
SIDBI Recruitment 2022 | Audit Consultant & Young Professional Posts | 18 Vacancies | Application Form | Last Date: 28.02.2022 | sidbi.in
Latest SIDBI Recruitment 2022 Notification – Small Industries Development Bank of India (SIDBI) அதாவது இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (06/ 2021-22) ஒன்றை 12.02.2022 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Junior Consultant – Engineering [Civil], Junior Consultant – Engineering [Mech.], Audit Consultant, Junior Audit Consultant, Company Secretary, Young Professional, Fund Manager, Lead Specialist (Equity & Venture Debt) மற்றும் HR Associate பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 18. இந்த பதவிகளுக்கு காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் SIDBI வலைதளம் (sidbi.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 28.02.2022. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒப்பந்த பணிநியமன (Contract basis) அடிப்படையில் மூன்று வருடங்கள் பணி அமர்த்தப்படுவார்கள். Audit Consultant மற்றும் Junior Audit Consultant பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
SIDBI வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்
பதவிகள் (Posts) | காலியிடங்கள் (Vacancies) |
Junior Consultant – Engineering [Civil] | 01 |
Junior Consultant – Engineering [Mech.] | 01 |
Audit Consultant | 04 |
Junior Audit Consultant | 04 |
Company Secretary | 01 |
Young Professional | 02 |
Fund Manager | 01 |
Lead Specialist (Equity & Venture Debt) | 02 |
HR Associate | 02 |
மொத்தம் (Total) | 18 |
SIDBI வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- Audit Consultant – அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்.
- Junior Audit Consultant – அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- B.Com/ ICAI லிருந்து பட்டயக் கணக்காளர்கள் (CA) தகுதி பெற்றிருக்க வேண்டும்/ ICWAI லிருந்து செலவு கணக்காளர்களாக (Cost Accountants) இருக்க வேண்டும்
- ICAI அல்லது ICWAI – ல் உறுப்பினராக (Member) இருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் அவர்களது பதவிகளுக்கேற்ப 01 முதல் 05 வருடங்கள் அனுபவங்கள் பெற்றிருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- நேர்காணல் (Interview)
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் SIDBI அதிகாரப்பூர்வ வலைதளம் (sidbi.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (passport size photograph) ஒட்டி மற்றும் தற்குறிப்பினை (CV) இணைத்து தேதியுடன் கையொப்பமிட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
- மின்னஞ்சல் முகவரி: (recruitment@sidbi.in).
- விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை தவறாது குறிப்பிட வேண்டும்.
- விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 28/02/2022.
விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் SIDBI வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி – Small Industries Development Bank of India (SIDBI) |
அறிவிப்பு எண் | 06/ 2021-22 |
பதவிகள் | Audit Consultant & Junior Audit Consultant |
காலியிடங்கள் | 18 |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் (E-mail) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 28.02.2022 |
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form)அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.