SFIO Recruitment 2021 | New Vacancy | Application Form

SFIO வேலைவாய்ப்பு 2021 | முதுநிலை உதவி இயக்குனர் பதவி | 01 காலியிடம் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 20.06.2021

SFIO Recruitment

SFIO Recruitment 2021 | Sr. Asst. Director Post | 01 Vacancy | Application Form | Last Date: 20.06.2021 | sfio.nic.in

Latest SFIO Recruitment 2021 Notification – Serious Fraud Investigation Office (SFIO) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (2/1/2021 – Admn./ SFIO) ஒன்றை 20.05.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி முதுநிலை உதவி இயக்குனர் (Senior Assistant Director) பதவிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கு Deputation முறை மூலம் காலியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 56,100/- முதல் ரூ. 1,77,500/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் தற்குறிப்பு படிவத்தினை (Bio-Data form) SFIO வலைதளத்திற்கு (sfio.nic.in) சென்று பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 20.06.2021. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் Delhi/ Mumbai/ Kolkata/ Chennai/ Hyderabad ஆகிய இடங்களில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள்.

SFIO வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

தேவைப்படும் தகுதி (Eligibility):-

  • மத்திய/ மாநில அரசு/ யூனியன் பிரதேசங்கள்/ தன்னாட்சி நிறுவனங்கள்/ பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள துறைகளில் குறைந்தபட்சம் 03 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் SFIO வலைதளம் (sfio.nic.in) சென்று தற்குறிப்பு படிவத்தினை (Bio-Data form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • முகவரி: Director, Serious Fraud Investigation Office, 2nd floor, Pt.Deendayal Antyodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi – 110 003.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் SFIO அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் Senior Fraud Investigation Office (SFIO)
அறிவிப்பு எண் 2/1/2021 – Admn./ SFIO
பதவி Senior Assistant Director
காலியிடம் 01
பணியிடங்கள் Delhi/ Mumbai/ Kolkata/ Chennai/ Hyderabad
ஊதியம் ரூ. 56,100 – ரூ. 1,77,500/-
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் (Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 20.06.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு