SBI Recruitment 2021 | 567 SCO Vacancies | Apply Online

SBI வேலைவாய்ப்பு 2021 | SCO பதவிகள் | 567 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.10.2021

SBI Recruitment

SBI Recruitment 2021 | Specialist Cadre Officer Posts | 567 Vacancies | Apply Online | Last Date: 18.10.2021 | sbi.co.in

Latest SBI Recruitment 2021 Notification – State Bank of India (SBI) அதாவது பாரத ஸ்டேட் வங்கியானது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (CRPD/SCO-WEALTH/2021-22/17) ஒன்றை 28.09.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Relationship Manager, Relationship Manager (Team Lead), Customer Relationship Executive, Investment Officer, Central Research Team (Product Lead) மற்றும் Central Research Team (Support) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 567. இந்த பதவிகளுக்கு 05 வருட ஒப்பந்த (Contract) அடிப்படையில் காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் SBI வலைதளத்திற்கு (sbi.co.in) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18.10.2021. விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மற்றும் மும்பையில் பணி  அமர்த்தப்படுவார்கள். இட ஒதுக்கீடு பற்றி அறிய அறிவிப்பை காணவும்.

SBI வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 20 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 45 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நாள் 01.08.2021.
  • வயது தளர்வு விவரங்களைப் பற்றி அறிய அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • MBA/ PGDM/ CA/ CFA/ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் இளநிலை/ முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • Customer Relationship Executive – இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் SBI அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த SBI SCO வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்வும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview)/ தொலைபேசி/ காணொளி காட்சி (Telephone/ Video Interview) வழியே நேர்காணல்.

விண்ணப்பக் கட்டணம் (Application Fee)/ அறிவிப்பு கட்டணம் (Intimation charges):-

  • விண்ணப்பக் கட்டணம் & அறிவிப்பு கட்டணம் – ரூ. 750/- இணைய வழி (Online) மூலம் செலுத்தலாம்.
  • SC/ ST/ PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் SBI வலைதளத்திற்கு (sbi.co.in) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சமீபத்திய புகைப்படம் (Photograph) மற்றும் கையொப்பம் (Signature) ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18.10.2021.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் SBI அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி – State Bank of India (SBI)
அறிவிப்பு எண் CRPD/SCO-WEALTH/2021-22/17
பதவிகள் Specialist Cadre Officers
காலியிடம்/ காலியிடங்கள் 567
பணியிடம்/ பணியிடங்கள் இந்தியாவில் எங்கும்/ மும்பை
கட்டணம் செலுத்தும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 18.10.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு