SBI PO Recruitment 2021 | 2056 Probationary Officer Vacancies | Apply Online

SBI PO வேலைவாய்ப்பு 2021 | அதிகாரி பணி | 2056 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.10.2021

SBI PO Recruitment

SBI PO Recruitment 2021 | Probationary Officer Post | 2056 Vacancies | Apply Online | Last Date: 25.10.2021 | SBI Careers (sbi.co.in)

Latest SBI PO Recruitment 2021 Notification – State Bank of India (SBI) அதாவது பாரத ஸ்டேட் வங்கியானது 2021ஆம் ஆண்டிற்கான Probationary Officer (PO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை (CRPD/ PO/ 2021-22/18) வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி தகுதிகாண் அலுவலர்/ அதிகாரி (Probationary Officer) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 2056. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ஆரம்பக்கட்ட ஊதியமாக ரூ.41,960/- வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் பாரத ஸ்டேட் வங்கி வலைதளத்திற்கு (sbi.co.in) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.10.2021. இந்த பதவிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க எழுத்துத் தேர்வு நடைபெறும். இந்த தேர்வானது நவம்பர்/ டிசம்பர் 2021-ல் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி  அமர்த்தப்படுவார்கள். இட ஒதுக்கீடு பற்றி அறிய அறிவிப்பை காணவும்.

SBI PO வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.04.2021.
  • வயது தளர்வு விவரங்களைப் பெற SBI PO 2021 அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • ஏதேனும் ஒரு பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.
  • Chartered Accountant (CA) படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • ஒருங்கிணைந்த இரட்டை பட்டம் (Integrated Dual Degree) பெற்றவராக இருப்பின் 31.12.2021 தேதிக்குள் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த பதவிக்கு இறுதி ஆண்டு/ அரையாண்டு (Semester) படித்துவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். நேர்காணலின் போது 31.12.2021 தேதிக்குள் தேர்ச்சிப்பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் SBI PO 2021 அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination)
  • முதன்மைத் தேர்வு (Main Examination)
  • நேர்காணல் (Interview)

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination): Objective test அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் இணைய (Online) வழியில் நடைபெறும்.
  • இதில் ஆங்கிலம் (English Language), அளவறியுந் திறன் (Quantitative Aptitude) மற்றும் பகுத்தறிவுத் திறன் (Reasoning Ability) தொடர்பாக 100 வினாக்கள் கேட்கப்படும்.
  • முதன்மைத் தேர்வு (Main Examination) – Objective test அடிப்படையில் 200 மதிப்பெண்களுக்கு 03 மணி நேரம் இணைய (Online) வழியில் நடைபெறும். இதில் பகுத்தறிவு மற்றும் கணினி திறன் (Reasoning and Computer Aptitude), தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கம் (Data analysis and Interpretation), பொது/ பொருளாதாரம்/ வங்கி விழிப்புணர்வு (General/ Economy/ Banking awareness) மற்றும் பொது ஆங்கிலம் (General English) ஆகியவை தொடர்பாக 155 வினாக்கள் கேட்கப்படும்.
  • அதனைத் தொடர்ந்து Descriptive test அடிப்படையில் 50 மதிப்பெண்களுக்கு 30 நிமிடங்கள் ஆங்கிலத்தில் கடிதம் மற்றும் கட்டுரை (Letter Writing & Essay) எழுத வேண்டும்.
  • நேர்காணல் (Interview) 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-

  • விண்ணப்பக் கட்டணம் ரூ.750/- இணைய வழி (Online) மூலம் செலுத்தலாம்.
  • SC/ ST/ PWD பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் SBI வலைதளத்திற்கு (sbi.co.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு புகைப்படம் (Photograph), கையொப்பம் (Signature), இடது கை கட்டை விரல் பதிவு (Left-Hand Thumb Impression), கையால் எழுதப்பட்ட பிரகடனம் (Hand Written Declaration) ஆகியவற்றை தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) முழுமையாக நிரப்பி 05/10/2021 முதல் 25/10/2021 வரை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் SBI PO 2021 அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி – State Bank of India (SBI)
அறிவிப்பு எண் CRPD/ PO/ 2021-22/18
பதவி Probationary Officer
காலியிடங்கள் 2056
பணியிடங்கள் இந்தியாவில் எங்கும்
ஊதியம் ரூ.41,960/-
தேர்வு நாள் நவம்பர் / டிசம்பர் 2021
கட்டணம் செலுத்தும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு