SBI PO Recruitment 2020 | Probationary Officer Vacancies | Apply Online

SBI PO வேலைவாய்ப்பு 2020 | அதிகாரி பணி | 2000 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.12.2020

SBI PO Recruitment

SBI PO Recruitment 2020 – 2021 | Probationary Officer Posts | 2000 Vacancies | Apply Online | Last Date: 04.12.2020 | SBI Careers

Latest SBI PO Recruitment 2020 Notification – State Bank of India (SBI) அதாவது பாரத ஸ்டேட் வங்கியானது 2020ஆம் ஆண்டிற்கான PO தேர்வு (Exam)/ வேலைவாய்ப்பு அறிவிப்பை (Advertisement No: CRPD/ PO/ 2020-21/ 12) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தகுதிகாண் அலுவலர்/ அதிகாரி (Probationary Officer) பதவிக்கு 2000 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் பாரத ஸ்டேட் வங்கி வலைதளத்திற்கு (bank.sbi/careers) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 04.12.2020. SBI PO 2020 அறிவிப்பில் (Notification) குறிப்பிட்டுள்ளபடி முதல்நிலை தேர்வானது டிசம்பர் 31, ஜனவரி 2, 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெறும். முதன்மை தேர்வானது ஜனவரி 29ஆம் தேதி நடைபெறும். இடஒதிக்கீடு காலியிடங்கள் பற்றி அறிய பாரத ஸ்டேட் வங்கியின் PO வேலைவாய்ப்பு அறிவிப்பை காணவும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி  அமர்த்தப்படலாம். பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ஆரம்பக்கட்ட ஊதியமாக ரூ.27,620 வழங்கப்படும்.

SBI PO 2020 அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள்.
  • அதிகப்பட்ச வயது 30 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.04.2020.
  • வயது தளர்வு விவரங்களை பெற SBI PO 2020 அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த பதவிக்கு இறுதி ஆண்டு/ அரையாண்டு (Semester) படித்துவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் நேர்காணலின் போது 31.12.2020 தேதிக்குள் தேர்ச்சிப்பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • ஒருங்கிணைந்த இரட்டை பட்டம் (Integrated Dual Degree) பெற்றவராக இருப்பின் 31.12.2020 தேதிக்குள் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
  • Chartered Accountant (CA) படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் SBI PO 2020 அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து விண்ணப்பிக்வும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • தெரிவு முறை மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. முதல் கட்டம் முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination), இரண்டாம் கட்டம் முதன்மைத் தேர்வு (Main Examination) மற்றும் மூன்றாம் கட்டம் நேர்காணல் (Interview) மற்றும் குழு விவாதம் (Group Exercises).
  • முதல்நிலைத் தேர்வின் மதிப்பெண்களை பொறுத்து முதன்மைத் தேர்விற்கு அழைக்கப்படுவர். முதன்மைத் தேர்வின் மதிப்பெண்களை பொறுத்து நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
  • இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் பெரும் மதிப்பெண்களை பொறுத்தே இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • முதனிலைத் தேர்வானது (Preliminary Examination) இணைய (Online) வழியாக 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் நடைபெறும். இதில் ஆங்கிலம் (English Language), அளவறியுந் திறன் (Quantitative Aptitude), பகுத்தறிவுத் திறன் (Reasoning Ability) வினாக்கள் கேட்கப்படும்.
  • முதன்மைத் தேர்வானது (Main Exam) 200 மதிப்பெண்களுக்கு மொத்தம் 3 மணி நேரம் நடைப்பெறும். இதில் பகுத்தறிவு மற்றும் கணினி திறன் (Reasoning and Computer Aptitude), தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கம் (Data analysis and Interpretation), பொது/ பொருளாதாரம்/ வங்கி விழிப்புணர்வு (General/ Economy/ Banking awareness) ஆகியவை தொடர்பாக வினாக்கள் கேட்கப்படும்.
  • அதனைத்தொடர்ந்து Descriptive test அதாவது ஆங்கிலத்தில் கடிதம் மற்றும் கட்டுரை எழுத வேண்டும்..

விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-

  • விண்ணப்பக் கட்டணம் எழுநூற்று ஐம்பதை (ரூ.750/-) இணைய வழி (Internet Banking/ Credit Card/ Debit Card) மூலம் செலுத்தலாம்.
  • SC/ ST/ PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
  • செலுத்தப்பெற்ற விண்ணப்பக் கட்டணம் திரும்பப்பெற மாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் SBI வலைதளத்திற்கு (sbi/careers) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு புகைப்படும் மற்றும் கையொப்ப நகலை தெளிவாக ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் புகைப்படம் அல்லது கையொப்பம் தெளிவாக இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) முழுமையாக நிரப்பி 14/11/2020 முதல் 04/12/2020 வரை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் SBI PO 2020 அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)
அறிவிப்பு எண் CRPD/ PO/ 2020-21/ 12
பதவி தகுதிகாண் அலுவலர் (Probationary Officer)
காலியிடங்கள் 2000
பணியிடங்கள் இந்தியா முழுவதும்

 

ஊதியம் ரூ. 27,620
தேர்வு நாள்
  • முதல்நிலைத் தேர்வு – 31.12.2020, 02.01.2020, 04.01.2020 & 05.01.2020.
  • முதன்மைத் தேர்வு – 29.01.2021
கட்டணம் செலுத்தும் முறை இணைய வழி (Online)
விண்ணப்ப முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 04/12/2020
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application)/ இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு