SBI Junior Associate Recruitment 2021 | 5454 JA Vacancies | Apply Online

SBI ஜூனியர் அசோசியேட் வேலைவாய்ப்பு 2021 | 5454 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.05.2021

SBI Junior Associate Recruitment

SBI Junior Associate Recruitment 2021 | Clerical Cadre Post | 5454 Vacancies | Apply Online | Last Date: 20.05.2021 | SBI Careers

Latest SBI Junior Associate Recruitment 2021 Notification – State Bank of India (SBI) அதாவது பாரத ஸ்டேட் வங்கியானது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (CRPD/CR/ 2021-22/09) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Junior Associates (Customer Support & Sales) பதவிக்கு மாநில வாரியாக மொத்தம் 5454 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 473 காலியிடங்கள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதிகாணும் காலம் (Probation Period) குறைந்தபட்சம் 6 மாதமாக இருக்கும்.

மேலும் பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.17,900 முதல் ரூ.47,920/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் பாரத ஸ்டேட் வங்கி வலைதளத்திற்கு (bank.sbi/careers) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்களிடமிருந்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கில் முதல் கட்டமாக முதல்நிலை தேர்வு (Preliminary Examination) நடத்தப்படும். இந்த முதல்நிலைத் தேர்வானது (Preliminary Examination) வருகிற ஜூன் மாதம் நடத்தப்படவுள்ளது. இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 20.05.2021.

SBI Junior Associate வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 20 ஆண்டுகள்.
  • அதிகப்பட்ச வயது 28 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/04/2021.
  • வயது தளர்வு விவரங்களை பெற SBI Junior Associate அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • ஏதேனும் ஒரு பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.
  • ஒருங்கிணைந்த இரட்டை பட்டம் (Integrated Dual Degree – IDD) பெற்றவராக இருப்பின் 16.08.2021 தேதிக்குள் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த பதவிக்கு இறுதி ஆண்டு (Final Year) / அரையாண்டு (Semester) படித்துவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் நேர்காணலின் போது 16.08.2021 தேதிக்குள் தேர்ச்சிப்பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் SBI Junior Associate அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination),
  • முதன்மைத் தேர்வு (Main Examination),
  • உள்ளூர் மொழிச் சோதனை (Test of local language).

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • இணைய வழி முதல்நிலைத் தேர்வானது (Online Preliminary Examination) 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் நடைபெறும். இதில் ஆங்கிலம் (English Language), எண் திறன் (Numerical Aptitude) மற்றும் பகுத்தறிவுத் திறன் (Reasoning Ability) தொடர்பாக 190 வினாக்கள் கேட்கப்படும்.
  • இணைய வழி முதன்மைத் தேர்வானது (Online Main Examination) 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நடைபெறும். இதில் பொது/ நிதி விழிப்புணர்வு (General/ Financial awareness), பொது ஆங்கிலம் (General English), அளவு திறன் (Qualitative Aptitude) மற்றும் பகுத்தறிவு திறன் மற்றும் கணினி திறன் (Reasoning and Computer Aptitude) ஆகியவை தொடர்பாக 190 வினாக்கள் கேட்கப்படும்.
  • SC/ ST/ OBC/ PWD/ XS/ DXS பிரிவினருக்கு மதிப்பெண்களில் 5% தளர்வு வழங்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-

  • விண்ணப்பக் கட்டணம் ரூ.750/- இணைய வழி (Online) மூலம் செலுத்தலாம்.
  • SC/ ST/ PWD/ XS/ DXS பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் SBI வலைதளத்திற்கு (sbi/careers) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு புகைப்படம் (Photograph), கையொப்பம் (Signature), இடது கை கட்டை விரல் பதிவு (Left-Hand Thumb Impression), கையால் எழுதப்பட்ட பிரகடனம் (Hand Written Declaration) ஆகியவற்றை தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) முழுமையாக நிரப்பி 27/04/2021 முதல் 20/05/2021 வரை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் SBI அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி – State Bank of India (SBI)
அறிவிப்பு எண் Ad No. CRPD/CR/ 2021-22/09
பதவிகள் Junior Associate
காலியிடங்கள் 5454
ஊதியம் ரூ.17,900 – ரூ.47,920/-
கட்டணம் செலுத்தும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 20.05.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு