SBI Apprentice Recruitment 2021 | 6100 Vacancies | Apply Online

SBI தொழில்பழகுநர் பயிற்சி 2021 | 6100 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.07.2021

SBI Apprentice Recruitment

SBI Apprentice Recruitment 2021 | Apprenticeship training | 6100 Vacancies | Apply Online | Last Date: 26.07.2021 | SBI Careers (sbi.co.in)

Latest SBI Apprentice Recruitment 2021 Notification – State Bank of India (SBI) அதாவது பாரத ஸ்டேட் வங்கியானது தற்போது தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு (ADVERTISEMENT NO: CRPD/APPR/2021-22/10) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி தொழில் பழகுநர் (Apprentices) பயிற்சிக்கு மாநில வாரியாக மொத்தம் 6100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 90 காலியிடங்கள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் பழகுநர் பயிற்சியானது ஒரு வருடம் நடைபெறும்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.15,000/- வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் பாரத ஸ்டேட் வங்கி வலைதளத்திற்கு (bank.sbi/careers) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26.07.2021. இந்த பயிற்சிக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கில் இணைய வழி எழுத்துத் தேர்வானது (Online Written Test) ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

SBI தொழில் பழகுநர் பயிற்சி அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 20 ஆண்டுகள்.
  • அதிகப்பட்ச வயது 28 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 31/10/2020.
  • வயது தளர்வு விவரங்களை பெற SBI தொழில் பழகுநர் பயிற்சி அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • ஏதேனும் ஒரு பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • இணைய வழி எழுத்துத் தேர்வு (Online written test).
  • உள்ளூர் மொழிச் சோதனை (Test of local language).
  • மருத்துவப் பரிசோதனை (Medical examination).

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • இணைய வழி எழுத்துத் தேர்வானது (Online written examination) Objective test அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் நடைபெறும்.
  • இதில் பொது/ நிதி விழிப்புணர்வு (General/ Financial awareness), பொது ஆங்கிலம் (General English), அளவறியுந் திறன் (Qualitative Aptitude) மற்றும் பகுத்தறிவு & கணினி திறன் (Reasoning and Computer Aptitude) ஆகியவை தொடர்பாக 100 வினாக்கள் கேட்கப்படும்.
  • SC/ ST/ OBC/ PWD பிரிவினருக்கு மதிப்பெண்களில் 5% தளர்வு வழங்கப்படுகிறது.

அறிவிப்புக் கட்டணம் (Intimation charges):-

  • அறிவிப்புக் கட்டணம் ரூ.300/- இணைய வழி (Online) மூலம் செலுத்தலாம்.
  • SC/ ST/ PWD பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் SBI வலைதளத்திற்கு (co.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டு உள்ளவாறு புகைப்படம் (Photograph), கையொப்பம் (Signature) மற்றும் சான்றிதழ்கள் நகல் ஆகியவற்றை தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) முழுமையாக நிரப்பி 06/07/2021 முதல் 26/07/2021 வரை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் SBI தொழில் பழகுநர் பயிற்சி அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி – State Bank of India (SBI)
அறிவிப்பு எண் CRPD/ APPR/ 2021-22/ 10
பதவி தொழில் பழகுநர் பயிற்சி (Apprentice)
காலியிடங்கள் 6100
பணியிடங்கள் இந்தியா முழுவதும்
ஊதியம் ரூ.15,000/-
தேர்வு இணைய வழி எழுத்துத் தேர்வு (Online written examination)
தேர்வு நாள் ஆகஸ்ட் 2021
கட்டணம் செலுத்தும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 26.07.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு