Salem District Government Jobs 2020 | Jeep Driver Vacancy | Application Form

சேலம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 | ஊர்தி ஓட்டுநர் | 01 காலியிடம் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 18.12.2020

Salem District Government Jobs

Salem District Government Jobs 2020 | Jeep Driver Post | 01 Vacancy | Application Form | Last Date: 18.12.2020 | salem.nic.in

Latest Salem District Government Jobs 2020 Notification – சேலம் மாவட்ட அரசு வலைதளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் (Animal Husbandry Department) ஊர்தி ஓட்டுநர் (Jeep Driver) பதவிக்கு 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் (Jeep Driver) பதவியை நிரப்ப தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. ஊர்தி ஓட்டுநர் (Jeep Driver) பதவிக்கு ஊதியமாக ரூ.19,500 – ரூ. 62,000/- வழங்கப்படும்.

மேலும், விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை (Application Form)  இலவசமாக சம்பந்தப்பட்ட மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் (Post) மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், சேலம் மாவட்ட இணையதளத்தில் (salem.nic.in) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன் நேரில் அல்லது தபால் (Post) மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பித்திட கடைசி தேதி 18.12.2020 (5.45 PM). இட ஒதிக்கீடு பற்றி அறிய சேலம் மாவட்ட அரசு அறிவிப்பைக் காணவும்.

சேலம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/07/2019.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் சேலம் மாவட்ட அரசின் அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த ஊர்தி ஓட்டுநர் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்வும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview).
  • நேர்காணலில் அதிக மதிப்பெண் பெரும் விண்ணப்பதாரர்கள் இன சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • SCA (W) (Priority) – இல் விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் SCA (GT) (Priority) – இல் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை (Application Form) இலவசமாக சம்பந்தப்பட்ட மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
  • மேலும், தபால் (Post) மூலம் பெற விரும்புவோர் சுயவிலாசமிட்ட ரூ.5 – க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய உறையுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது சேலம் மாவட்ட இணையதளத்தில் (nic.in) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம்.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இருப்பிடச் சான்று போன்ற உரிய சான்றிதழ் நகல்களுடன் நேரில் அல்லது பின்வரும் முகவரிக்கு தபால் (Post) மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
  • அஞ்சல் முகவரி: மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துத்துறை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், பிரட்ஸ்ரோடு, சேலம் – 1.
  • விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின் மீது பெரிய எழுத்துகளில் தவறாது குறிப்பிட வேண்டும்.
  • விண்ணப்பங்களை 18/12/2020 தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் சேலம் மாவட்ட அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் கால்நடை பராமரிப்புத் துறை
பதவிகள் ஊர்தி ஓட்டுநர் (Jeep Driver)
காலியிடம் 01
பணியிடம் சேலம்
ஊதியம் ரூ.19,500 – ரூ. 62,000/-
விண்ணப்பிக்கும் முறை நேரில்/ தபால் (Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 18.12.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு