RHFL வேலைவாய்ப்பு 2021 | புதிய காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.12.2021
RHFL Recruitment 2021 | Administrator Post | Bio-Data Form | Last Date: 23.12.2021 | repcohome.com
Latest RHFL Recruitment 2021 Notification – Repco Home Finance Limited (RHFL) அதாவது ரெப்கோ வீட்டு நிதி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி Networking Administrator, Database Administrator & System Administrator பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தகுதிகாணும் காலம் (Probation Period) 01 வருடம் இருக்கும்.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் RHFL வலைதளத்திற்கு (repcohome.com) சென்று தற்குறிப்பு படிவத்தினை (Bio-Data form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்த படிவத்தினை அஞ்சல் (Post) மூலமாகவோ/ கூரியர் (Courier) மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 23.12.2021 (5.00 PM). மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
RHFL வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
- Database Administrator – அதிகபட்ச வயது 28 ஆண்டுகள்.
- வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/12/2021.
- வயது தளர்வு விவரங்களைப் பெற RHFL அறிவிப்பை காணவும்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- BCA/ B.Tech/ B.E (CS/ IT/ Circuit Branch) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள துறைகளில் குறைந்தபட்சம் மூன்று அல்லது ஐந்து வருடங்கள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் RHFL அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த RHFL வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் RHFL வலைதளத்திற்கு (repcohome.com) சென்று தற்குறிப்பு படிவத்தினை (Bio-Data form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
- முழுமையாக பூர்த்தி செய்த படிவத்தினை அஞ்சல் (Post) மூலமாகவோ/ கூரியர் (Courier) மூலமாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- முகவரி: The Deputy General Manager (HR), Repco Home Finance Limited, 3rd Floor, Alexander Square, New No. 2/Old No. 34 & 35, Sardar Patel Road, Guindy, Chennai – 600 032.
- விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின் மீது தவறாது குறிப்பிட வேண்டும்.
- விண்ணப்பங்களை 23/12/2021 தேதி மாலை 5:00 PM மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் RHFL அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | ரெப்கோ வீட்டு நிதி நிறுவனம் – Repco Home Finance Limited (RHFL) |
பதவி | Networking Administrator, Database Administrator & System Administrator |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் (Post)/ கூரியர் (Courier) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 23.12.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.