ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு 2021 | மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பதவிகள் | 10 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 12.07.2021
Repco Bank Recruitment 2021 | Manager & Asst. Manager Posts | 10 Vacancies | Application Form | Last Date: 12.07.2021 | repcobank.com
Latest Repco Bank Recruitment 2021 Notification – ரெப்கோ வங்கி (Repco Bank) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி மேலாளர் (Manager) மற்றும் உதவி மேலாளர் (Assistant Manager) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 10 ஆகும். இந்த ஆட்சேர்ப்புக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பதவிக்கேற்ப ஊதியமாக ரூ.36000 முதல் ரூ.69810 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் ரெப்கோ வங்கி வலைதளம் (repcobank.com) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12.07.2021. காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு செய்தியின் காலிப்பணியிடங்கள்
பதவிகள் (Posts) | காலியிடங்கள் (Vacancies) |
Manager (Chartered Accountant) | 01 |
Manager (Legal) | 02 |
Assistant Manager (Legal) | 02 |
Assistant Manager IT (Hardware) | 02 |
Assistant Manager IT (Software) | 03 |
மொத்தம் (Total) | 10 |
ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- மேலாளர் – அதிகபட்ச வயது 40 ஆண்டுகள்.
- உதவி மேலாளர் – அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
- வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 31.05.2021.
- வயது தளர்வு விவரங்களை பெற ரெப்கோ வங்கி அறிவிப்பை காணவும்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- B.E/ B.Tech/ M.C.A/ B.L/ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள துறைகளில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் ரெப்கோ வங்கி அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்வும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- எழுத்துத்தேர்வு (Written Exam)
- நேர்காணல் (Interview)
விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-
- விண்ணப்பக் கட்டணமாக ரூ.708/- செலுத்த வேண்டும்.
- கட்டணத்தை வரைவோலை (Demand Draft) மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ரெப்கோ வங்கி வலைதளத்திற்கு (repcobank.com) சென்று விண்ணப்பப் படிவத்தினை (Application form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
- முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் புகைப்படம் (Passport Size Photograph) இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- முகவரி: The General Manager (Admin), Repco Bank , P.B.No.1449, Repco Tower, No.33 North Usman Road, T. Nagar, Chennai 600 017.
- விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின் மீது தவறாது குறிப்பிட வேண்டும்.
- விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 12/07/2021.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் ரெப்கோ வங்கி (Repco Bank) அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | ரெப்கோ வங்கி (Repco Bank) |
பதவிகள் | மேலாளர் (Manager) & உதவி மேலாளர் (Assistant Manager) |
காலியிடங்கள் | 10 |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | தபால் (Post) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 12.07.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.