Ranipet District Government Jobs 2021 | New Vacancies | Application Form

இராணிப்பேட்டை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 | மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர் மற்றும் பல பதவிகள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.09.2021

Ranipet District Government Jobs

Ranipet District Government Jobs 2021 | CA, SC, IT Admin & various Posts | Application Form | Last Date: 24.09.2021 | ranipet.nic.in

Latest Ranipet District Government Jobs 2021 Notification – இராணிப்பேட்டை மாவட்ட அரசு வலைதளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி சமூக நலத்துறையின் கீழ் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் – (One stop centre) பணிபுரிய மைய நிர்வாகி (Centre Administrator), மூத்த  ஆலோசகர் (Senior Counsellor), தகவல் தொழில்நுட்ப நிர்வாக பணியாளர் (IT Admin), வழக்கு பணியாளர் (Case Worker), பாதுகாவலர்/ ஓட்டுநர் (Security/ Driver) மற்றும் பல்நோக்கு உதவியாளர் (Multi Purposer) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இராணிப்பேட்டை மாவட்ட அரசு வலைத்தளத்தில் (ranipet.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 24.09.2021.

இராணிப்பேட்டை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

கல்வித் தகுதி (Educational Qualification):-

  • மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர் & வழக்கு பணியாளர் – முதுநிலை பட்டம் (சமூகப்பணி/ உளவியல் ஆலோசனை/ வளர்ச்சி மேலாண்மை) பெற்றிருக்க வேண்டும்.
  • தகவல் தொழில்நுட்ப நிர்வாக பணியாளர் – இளநிலை/ முதுநிலை (B.Sc/ M.Sc/ B.Tech/ M.Tech) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • பாதுகாவலர்/ ஓட்டுநர் & பல்நோக்கு உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • விண்ணப்பதாரர்கள் அவர்களது பதவிகளுக்கேற்ப சம்பந்தப்பட்ட துறைகளில் 02 முதல் 05 வருடங்கள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • இராணிப்பேட்டையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • பல்நோக்கு உதவியாளர் – நன்கு சமைக்க தெரிந்தவராகவும் மற்றும் மையத்திலேயே தங்க விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் இராணிப்பேட்டை மாவட்ட அரசு அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இராணிப்பேட்டை மாவட்ட அரசு வலைத்தளம் (ranipet.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை (Application Form) பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், 4வது மாடி, “B” பிளாக், மாவட்ட ஆட்சியார் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 24.09.2021.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் இராணிப்பேட்டை மாவட்ட அரசு அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் சமூக நலத்துறை
பதவிகள் Centre Administrator, Senior Counsellor,  IT Admin, Case Worker, Security/ Driver & Multi Purposer
பணியிடம் இராணிப்பேட்டை
விண்ணப்பிக்க கடைசி நாள் 24.09.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) / விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு