புதுக்கோட்டை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 | கணினி உதவியாளர் பதவி | விண்ணப்பிக்க கடைசி தேதி – 16.11.2021
Pudukkottai District Government Jobs 2021 | Computer Assistant Posts | Application Form | Last Date: 16.11.2021 | pudukottai.nic.in
Latest Pudukkottai District Government Jobs 2021 Notification – புதுக்கோட்டை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு (செ.வெ.எண்.625) ஒன்றை 25.10.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவு பிரிவில் பணிபுரிய கணினி உதவியாளர் (Computer Assistant) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கு தற்காலிக பணிநியமனம் மூலம் காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 12, 000/- வழங்கப்படும். விண்ணப்பிக்கும் விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பப் படிவங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 16.11.2021. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பகுதி நேர அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
கல்வித் தகுதி (Educational Qualification):-
- ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.,
பிற தகுதிகள் (Other Qualification):-
- கணினியில் M.S. Office பற்றி போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
- தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரங்களை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து கையொப்பமிட வேண்டும்.
- முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் கல்வித்தகுதி, மதிப்பெண் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகலை Gazetted Officer-ன் மேலொப்பம் பெற்று பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- முகவரி: மாவட்ட ஆட்சியர், சத்துணவு திட்டப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை.
- விண்ணப்பங்களை 16.11.2021 தேதி 5.00 PM மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் புதுக்கோட்டை மாவட்ட அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பு எண் | செ.வெ.எண்.625 |
பதவி | கணினி உதவியாளர் (Computer Assistant) |
ஊதியம் | ரூ. 12, 000/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 16.11.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.