Pudukkottai District Court Recruitment 2021 | Steno Vacancies | Application Form

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 | சுருக்கெழுத்து தட்டச்சர் பதவி | 10 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.10.2021

Pudukkottai District Court Recruitment

Pudukkottai District Court Recruitment 2021 | Steno Typist Post | 10 Vacancies | Application Form | Last Date: 18.10.2021 | districts.ecourts.gov.in/pudukkottai

Latest Pudukkottai District Court Recruitment 2021 Notification – புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி புதுக்கோட்டை நீதித்துறை அலகில் சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno Typist) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 10. இந்த பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,600/- முதல் ரூ.65,500/- வரை சம்பளமும் மற்றும் இதர படிகளும் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form)  கீழ்கண்ட வலைத்தளத்தில் (districts.ecourts.gov.in/pudukkottai) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 18.10.2021 ஆகும். இட ஒதுக்கீடு பற்றி அறிய அறிவிப்பை காணவும்.

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 32 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நாள் 01.09.2021.
  • வயது தளர்பு விவரங்களை பெற அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பத்தாம் வகுப்பு/ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (இளநிலை/ முதுநிலை) சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி அறிவி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கல்வித் தகுதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள அறிவிப்பை காணவும்.

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றம் அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • எழுத்துத் தேர்வு (Written test)
  • செய்முறை தேர்வு (Practical test)

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • எழுத்துத் தேர்வு (Written test) இரண்டு பகுதிகளாக கொள்குறி வகை அடிப்படையில் 01 மணி நேரத்திற்கு நடைபெறும்.
  • இதில் பொது அறிவு (General Knowledge) மற்றும் பொது தமிழ் (General Tamil) தொடர்பாக 35 வினாக்கள் கேட்கப்படும்.
  • செய்முறை தேர்வு (Practical test) 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) கீழ்கண்ட வலைத்தளத்தில் (districts.ecourts.gov.in/pudukkottai) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
  • முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் சுயசான்றொப்பமிட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport size photograph), கல்விச் சான்றிதழ், தேவையான மற்றும் முன்னுரிமை சான்றிதழ்கள் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு (Self-attestation) பதிவஞ்சல் (Registered post) மூலமாக பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், புதுக்கோட்டை மாவட்டம் – 622 001.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 18.10.2021 ஆகும்.

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றம் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றம் – Pudukkottai District Court
பதவிகள் சுருக்கெழுத்து தட்டச்சர் (Shorthand Typist)
காலியிடங்கள் 10
ஊதியம் ரூ.20,600 – ரூ.65,500/-
விண்ணப்பிக்கும் முறை பதிவஞ்சல் (Registered post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 18.10.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு