Passport Office Recruitment 2021 | Latest Vacancies | Application Form

பாஸ்போர்ட் அலுவலக வேலைவாய்ப்பு 2021 | பாஸ்போர்ட் அதிகாரி & பாஸ்போர்ட் அதிகாரி பதவிகள் | 16 காலியிடங்கள் | அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

Passport Office Recruitment

Passport Office Recruitment 2021 | Passport Officer & Deputy Passport Officer Posts | 16 Vacancies | Application Form | Last Date: 60 Days | mea.gov.in

Latest Passport Office Recruitment 2021 Notification – Central Passport Organisation அதாவது மத்திய கடவுச்சீட்டு அமைப்பு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (No. V.IV/ 575/ 2/ 2020) ஒன்றை 31.12.2020 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி பாஸ்போர்ட் அதிகாரி (Passport Officer) மற்றும் துணை பாஸ்போர்ட் அதிகாரி (Deputy Passport Officer) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு மாநில வாரியாக மொத்தம் 16 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டிற்கு 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு காலியிடம் சென்னையிலும் மற்றொன்று மதுரையிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.  தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தற்காலிக பரிமாற்று முறைப்படி (Deputation Basis) பணி அமர்த்தப்படுவார்கள்.

பாஸ்போர்ட் அதிகாரி (Passport Officer) பதவிக்கு ஊதியமாக ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரையிலும், துணை பாஸ்போர்ட் அதிகாரி (Deputy Passport Officer) பதவிக்கு ஊதியமாக ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரையிலும் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வலைதளம் (mea.gov.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பாஸ்போர்ட் அலுவலக வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 56 ஆண்டுகள்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • பாஸ்போர்ட் அதிகாரி (Passport Officer) பதவிக்கு விண்ணப்பிப்பவர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவில்  மத்திய அல்லது மாநில அரசு அலுவலகத்தில் பத்து வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • துணை பாஸ்போர்ட் அதிகாரி (Deputy Passport Officer) பதவிக்கு விண்ணப்பிப்பவர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவில் மத்திய அல்லது மாநில அரசு அலுவலகத்தில் ஏழு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் மத்திய பாஸ்போர்ட் அமைப்பு அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த பாஸ்போர்ட் அதிகாரி (Passport Officer) மற்றும் துணை பாஸ்போர்ட் அதிகாரி (Deputy Passport Officer) வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வலைதளம் (mea.gov.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும்.
நிறுவனம் மத்திய பாஸ்போர்ட் அமைப்பு – Central Passport Organisation
அறிவிப்பு எண் No. V.IV/ 575/ 2/ 2020
பதவிகள் பாஸ்போர்ட் அதிகாரி (Passport Officer) / துணை பாஸ்போர்ட் அதிகாரி (Deputy Passport Officer)
காலியிடங்கள் 02
பணியிடங்கள் சென்னை/ மதுரை
ஊதியம்
  • Passport Officer – ரூ.78,800 – ரூ.2,09,200/-
  • Deputy Passport Officer – ரூ. 67,700 – ரூ.2,08,700/-
விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க  வேண்டும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு