Ordnance Factory Trichy Recruitment 2021 | 84 Apprentices Vacancies | Interview

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2021 | தொழில் பழகுநர் பயிற்சி | 84 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 01.10.2021

Ordnance Factory Trichy Recruitment

Ordnance Factory Trichy Recruitment 2021 | Apprenticeship Training | 84 Vacancies | Interview Date: 01.10.2021 | mhrdnats.gov.in

Latest Ordnance Factory Trichy Recruitment 2021 Notification – Ordnance Factory Trichy (OFT) அதாவது படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி தற்போது தொழில் பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship Training) அறிவிப்பு (davp/ 10201/ 11/ 0016/ 2122) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி பொறியியல் பட்டதாரி/  தொழில்நுட்பவியலாளர் (Technician) பயிற்சிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 84. இப்பயிற்சிக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், பயிற்சியளிக்கப்டும் நபர்களுக்கு ஊக்கத்தொகையாக அவர்களது பதவிகளுக்கேற்ப ரூ.3,542/- மற்றும் ரூ.4,984/- வழங்கப்படும். இந்த தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுக்க நேர்காணல் (Walk-in Interview) நடைபெறும். நேர்காணல் நடைபெறும் நாள் 01.10.2021. இந்த பதவிகளுக்கு பயிற்சி காலம் 01 வருடமாக இருக்கும். இந்த அறிவிப்பு செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பொறியியல் (Engineering) அல்லது பட்டயபடிப்பில் (Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview)

நேர்காணல் விவரங்கள் (Walk-in Details):-

  • நாள் – 01.10.2021.
  • இடம் – HRD பிரிவு, படைக்கலத் தொழிற்சாலை (Ordnance factory), திருச்சி.

நேர்காணலில் பங்கேற்கும் முறை (Walk-in Procedure):-

  • நேர்காணலில் பங்கேற்கும் முன் தொழில் பழகுநர் பயிற்சிக்கான வலைதளத்தில் (mhrdnats.gov.in) பதிவு செய்ய வேண்டும்.
  • நேர்காணலில் பங்கேற்கும் போது கல்விச் சான்றுகள், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தேவையான சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல்களை கொண்டு செல்ல வேண்டும்.
  • தொழில் பழகுநர் வாரியத்தில் பதிவு செய்த அத்தாட்சியுடன் பங்கேற்க வேண்டும்.

இந்த நேர்காணலில் பங்கேற்கும் முன்னர் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக நேர்காணலில் பங்கேற்கும் முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.

நிறுவனம் படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (Ordnance Factory Trichy)
அறிவிப்பு எண் davp/ 10201/ 11/ 0016/ 2122
பதவிகள் தொழில் பழகுநர் (Apprentices)
காலியிடங்கள் 84
நேர்காணல் நடைபெறும் நாள் 01.10.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு