NPCIL கூடங்குளம் வேலைவாய்ப்பு 2021 | பொறியாளர் பணி | 34 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.09.2021
NPCIL Kudankulam Recruitment 2021 | KNPP | Engineer Post | 34 Vacancies | Application Form | Last Date: 18.09.2021 | npcil.nic.in
Latest NPCIL Kudankulam Recruitment 2021 Notification – Nuclear Power Corporation of India Limited (NPCIL), கூடங்குளம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (KKNPP/HRM/03/2021) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி கூடங்குளம் அணு மின் திட்டத்தில் (Kudankulam Nuclear Power Project) பணிபுரிய பொறியாளர் (Engineer) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 34. இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் Fixed Term அடிப்படையில் 02 வருடங்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.
மேலும், தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக (Consolidated Pay) மாதம் ரூ.61,400/- மற்றும் சலுகைகளும் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) NPCIL வலைதளத்திற்கு (npcil.nic.in) சென்று பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை (Application Form) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18.09.2021. இட ஒதுக்கீடு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
NPCIL கூடங்குளம் வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்.
- வயதை கணிக்க அறிவிக்கப்பட்டுள்ள நாள் 18.09.2021.
- வயது தளர்வு விவரங்களைப் பெற NPCIL அறிவிப்பை காணவும்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- குடிமுறை (Civil)/ இயந்திர (Mechanical) பொறியியலில் (B.E/ B.Tech) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- எழுத்துத் தேர்வு (Written test)
- நேர்காணல் (Interview)
தேர்வு விவரம் (Exam Pattern):-
- எழுத்துத் தேர்வானது (Written Examination) Objective type questions அடிப்படையில் OMR தாளில் 100 வினாக்களுக்கு 02 மணி நேரம் நடைபெறும்.
- இதில் பொறியியல் (Engineering) தொடர்பாக வினாக்கள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) NPCIL வலைதளத்திற்கு (npcil.nic.in) சென்று பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
- முழுமையாக பூர்த்தி செய்த படிவத்தினை பிறப்புச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அஞ்சல் (Post) மூலமாகவோ அல்லது கூரியர் (Courier) மூலமாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- முகவரி: Senior Manager (HRM), HRM Section, Kudankulam Nuclear Power Project, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli District, Tamilnadu – 627 106.
- விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின் மீது தவறாது குறிப்பிட வேண்டும்.
- விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18/09/2021
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் NPCIL கூடங்குளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | Kudankulam Nuclear Power Project |
அறிவிப்பு எண் | KKNPP/ HRM/ 03/ 2021 |
பதவிகள் | Fixed term Engineer |
காலியிடங்கள் | 34 |
ஊதியம் | ரூ.61,400/- |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் (Post) / கூரியர் (Courier) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 18.09.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) / விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.