NLCIL Recruitment 2021 | 56 IT Vacancies | Apply Online

NLCIL வேலைவாய்ப்பு 2021 | என்.எல்.சி. இந்தியா | தொழில்துறை பயிற்சியர் | 56 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.11.2021

NLCIL Recruitment

NLCIL Recruitment 2021 | Industrial Trainee Posts | 56 Vacancies | Apply Online | Last Date: 22.11.2021 | nlcindia.in

Latest NLCIL Recruitment 2021 Notification – நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (Neyveli Lignite Corporation) என்று அழைக்கப்பட்ட என்.எல்.சி இந்தியா நிறுவனம் – NLC India Limited (NLCIL) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (07/2021) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி தொழிற்துறை பயிற்சியர் (Industrial Trainee – Finance) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 56.  தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.22,000/- வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் NLC வலைதளத்திற்கு (nlcindia.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி விண்ணப்பத்தை (Online Application Form) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 22.11.2021. இந்த பயிற்சியானது ஓர் ஆண்டு வழங்கப்படும்.

NLCIL வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 28 ஆண்டுகள்.
  • வயது தளர்வு விவர்களைப் பெற அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • Institute of Chartered Accountants of India – வில் CA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • மதிப்பெண் அடிப்படை.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் NLC வலைதளத்திற்கு (nlcindia.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு புகைப்படும் (Photograph), கையொப்பம் (Signature), பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகலை தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
  • விண்ணப்பங்களை 22.11.2021 தேதி 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்  வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் NLC அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் என்.எல்.சி இந்தியா நிறுவனம் – NLC India Limited (NLCIL)
அறிவிப்பு எண் 07/2021
பதவிகள் Industrial Trainee (IT)
காலியிடங்கள் 56
ஊதியம் ரூ.22,000/-
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 22.11.2021
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு