Namakkal District Government Jobs 2021 | Overseer/ JDO Vacancies | Application form

நாமக்கல் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 | பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் | 43 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.01.2021

Namakkal District Government Jobs

Namakkal District Government Jobs 2021 | Overseer/ Junior Drafting Officer Post | 43 Vacancies | Application Form | Last Date: 07.01.2021 | namakkal.nic.in

Latest Namakkal District Government Jobs 2021 Notification – நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் (Rural Development & Panchayat Unit, Namakkal) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு (ந.க.எண். தி2/18378/2020) ஒன்று 07.12.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது நாமக்கல் மாவட்ட அரசு வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி பணிப்பார்வையாளர் (Overseer)/ இளநிலை வரைதொழில் அலுவலர் (Junior Drafting Officer) பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 43 ஆகும். இந்த பணிகளுக்கு நேரடி நியமனம் (Direct Appointment) மூலம் காலியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவத்தினை (Application Form) நாமக்கல் மாவட்ட அரசு வலைதளத்திலிருந்து (namakkal.nic.in) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 07.01.2021 (5.45 PM). காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேற்கூறப்பட்ட பணிகளுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகப் பட்ச வயது 35 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/07/2020.

கல்வித் தகுதி (Educational Qualification):-

  • பட்டயப்படிப்பில் சிவில் பொறியியல் (Diploma in Civil Engineering) பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • எழுத்துத் தேர்வு (Written test).
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து தேர்வு நுழைவுச்சீட்டு (Hall Ticket) அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் நாமக்கல் மாவட்ட அரசு வலைதளம் (namakkal.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, சாதிச்சான்று மற்றும் முன்னுரிமை சான்றுகளின் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 05:45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியரகம் 3வது தளம், நாமக்கல் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
  • விண்ணப்பங்களை 07/01/2021 தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் நாமக்கல் மாவட்ட அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் நாமக்கல் மாவட்ட அரசு (Namakkal District Government)
அறிவிப்பு எண் தி2/18378/2020
பதவி பணிப் பார்வையாளர் (Overseer)/ இளநிலை வரைதொழில் அலுவலர் (Junior Drafting Officer)
காலியிடங்கள் 43
பணியிடம் நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு (Rural Development & Panchayat Unit, Namakkal)
ஊதியம் ரூ.35,400 – ரூ.1,12,400/-
விண்ணப்பிக்கும் முறை நேரில்/ பதிவஞ்சல் (Registered Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 07.01.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு