MHC Recruitment 2021 | 37 Law Clerks Vacancies | Application Form

சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 | Law Clerk பதவி | 37 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.09.2021

MHC Recruitment

MHC Recruitment 2021 | Law Clerks Post | 37 Vacancies | Application Form | Last Date: 10.09.2021 | hcmadras.tn.nic.in

Latest MHC Recruitment 2021 Notification – Madras High Court அதாவது சென்னை உயர்நீதி மன்றம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி Law Clerks பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் Adhoc  அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் ஒரு வருட காலம் பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப படிவத்தை (Application Form) சென்னை உயர்நீதி மன்றம் வலைதளத்தில் (hcmadras.tn.nic.in) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.09.2021. காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.

சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நாள் 01/07/2021.

கல்வித் தகுதி (Educational Qualification):-

  • சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் சென்னை உயர்நீதி மன்றம் வலைதளம் (hcmadras.tn.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஸ்கேன் செய்து மின்னஞ்சல் (mhclawclerkrec@gmail.com) மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.09.2021.
  • பின்னர் விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • The Register General, High Court, Madras – 600 104.
  • விண்ணப்பங்களை பதிவுத் தபால் மூலம் 13.09.2021 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றம் (Madras High Court)
பதவிகள் Law Clerks
காலியிடங்கள் 37
பணியிடங்கள் சென்னை மற்றும் மதுரை
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல் (Email) & விரைவுத் தபால் (Registered Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 10.09.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Comments 4

  1. I register on office assistance post

    • A. Jenifer

      I register on office assistance post

  2. Deepak Subash

    Job

  3. Anbarasu T

    Office assistant post

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு